June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

சாத்தான் தி டார்க் திரைப்பட விமர்சனம்

by by Mar 28, 2026 0

சமீபத்தில் இப்படி ஒரு ஹாரர் படம் பார்த்ததில்லை. வழக்கமாக இது போன்ற ஹாரர் படங்களில் ஒரு ஆவி யாரையாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும். இதில் அந்த வேலையை தெய்வத்துக்கு எதிரான சாத்தான் செய்கிறது. 

இந்தியாவை மேலைநாட்டவர்கள் ஆண்ட காலத்தில் இருந்தே இது போன்ற சாத்தான் வழிபாட்டு நம்பிக்கைகள் இருந்து வந்ததை தொடக்கத்தில் கதையாகச் சொல்கிறார்கள். கடவுளை நம்பாதவர்கள் சாத்தானை வழிபட்டு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நிருபித்ததாக சொல்லப்படும் ஒரு புத்தகம், அதை பயன்படுத்திய மாந்திரீகரோடு…

Read More

நீ forever திரைப்பட விமர்சனம்

by by Mar 28, 2026 0

காதலில் என்ன ‘நல்ல காதல், கள்ளக் காதல்..?’ என்பார்கள். எல்லாமே கள்ளம்தான். அந்த வகையில் இந்த படத்தில் ஏமாற்றிக் காதலித்த இருவர் என்ன ஆனார்கள் என்பதை கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. 

பெற்ற மகள் காதலித்து அவளது வாழ்க்கை வீணாகப் போனதால், கணவனை விட்டு வீடு திரும்பிய அவளை தன் வசம் வைத்து காப்பாற்றுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த பெரிய மனிதரான ஒய்.ஜி.மகேந்திரன். 

அதனால் பேத்தியையும், பேரனையும்  சிறுவயதில் இருந்து கண்டிப்பாக வளர்க்கிறார். காதல் உள்ளிட்ட நவீனங்கள் எதுவும்…

Read More

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

by by Mar 25, 2026 0

Read More

யூத் திரைப்பட விமர்சனம்

by by Mar 22, 2026 0

தலைப்புக்கு ஏற்றாற்போல் இளமை கொப்பளிக்கும்… இளைஞர்களுக்கான கதை.

இப்படி ஒரு படத்தைத் திறம்பட இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் கென் கருணாஸ். 

பள்ளியில் பத்தாவது தொடங்கி பன்னிரெண்டாவது வகுப்பு முடியும் வரையில் நடக்கும் கதை.

சினிமா வழக்கப்படியே கல்வியில் கவனம் செலுத்தாமல் மற்ற எல்லா ரவுசுகளிலும் கவனம் செலுத்துபவராக வருகிறார் கென். கூடவே தன்னை யாரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை வேறு அவருக்கு இருக்கிறது. 

இந்நிலையில் அவரைப் போலவே வகுப்பில் ஏதாவது அடாவடி செய்து வகுப்புக்கு வெளியே நிற்கும்…

Read More

திவ்யா திரைப்பட விமர்சனம்

by by Mar 17, 2026 0

சாதிப் பிரச்சினையின் கொடூரத்தை சொல்லும் இன்னொரு படம். 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான நாயகன் ஆர் ஜே பி தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். பரம்பரையாகவே பறை இசைக் கலைஞராக வரும் அவர் வாழ்வில் முன்னேற எண்ணி கல்லூரியில் படித்து வருகிறார். 

அதே கல்லூரியில் அவர் படிக்கும் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேரும் நாயகி கேத்திக்கும்  அவருக்கும் ஆரம்பம் முதலே முட்டிக்கொள்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது. 

கேத்தி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். ஒரு…

Read More

கொலை சேவல் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2026 0

காதலில் விழுந்த கலையரசனும் தீபா பாலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு தீபா பாலு வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது. 

அதற்காக வெளியூர் சென்று வாழ்க்கை நடத்தும் இருவரும் தீபா பாலு கர்ப்பமான பின் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். 

காட்டுக்குள் இருக்கும் அவர்களது குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு பலி கொடுத்து பூஜை நடத்தினால் அது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்கிற நம்பிக்கையில் கலையரசன் குடும்பமே அந்த கோயிலுக்கு பயணப்படுகிறார்கள். 

இந்நிலையில் தீபா பாலுவின் அப்பாவாக வரும்…

Read More

கெணத்த காணோம் திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2026 0

வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம். 

அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப் பார்த்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் யோகி பாபுவின் வீடு இருக்கும் பகுதியின் அடியில் நீர் வளம் இருப்பதை அந்த ஊர்…

Read More

வெஞ்சென்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Mar 12, 2026 0

2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது.

ஒதுக்கப்பட்ட கல் கட்டத்தின் மூலைக் கல்லானது என்ற பழமொழியின் படி பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாமலிருந்த நாயகி அபர்ணதி இந்த சமுதாயத்தின் மீதிருந்த ஆற்றாமையில் கடுமையாக உழைத்துப் படித்து ஐ ஏ எஸ் ஆகி கலெக்டரும் ஆகிறார்.

அரசியல்வாதிகளை சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் அவர் அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையை சம்பாதிக்கிறார். அதன் விளைவாக சஸ்பென்ட்…

Read More

போலீஸ் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

by by Mar 12, 2026 0

அடிக்கடி நடைபெறும் லாக்கப் மரணங்களை நினைவுபடுத்தும் கதை. அப்படி மதுரைப்பக்கம் கஞ்சா வைத்திருந்ததால் சந்தேகப்பட்டு லாக்கப்பில் அடைத்த இளைஞனை சுகுமார் உள்ளிட்ட நான்கு போலீஸ்காரர்கள் நையப்புடைப்பதில் அவர் மயக்கமாகிறார்.

அதற்குப் பின்தான் அவர் மதுரையில் தலைமறைவாக இருக்கும் அரசியல் பின்புலமுள்ள தாதா சரவணனின் மகன் எனத் தெரிகிறது.

அதில் பயந்துபோன போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை யாருமற்ற இடத்தில் போட்டுச் செல்ல, மறுநாள் அவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாகத் தெரிகிறது.

மகன் இறந்ததால் வெறி கொண்ட தாதா சரவணன் அதற்குக் காரணமான…

Read More

வடம் திரைப்பட விமர்சனம்..!

by by Mar 8, 2026 0

திறமைக்கும், வீண் பெருமைக்குமான போட்டி தான் கதைக்களம்.

இதற்கு படங்களில் நாம் அதிகம் அறிந்திடாத வட மஞ்சுவிரட்டு என்கிற ஜல்லிக்கட்டுக்கு மாற்றான ஒரு விளையாட்டை வடம் பிடித்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன். வி.

ஊர் பெரிய மனிதரான ஆடுகளம் நரேன் ரொம்ப நல்லவராக இருக்கிறார். மாடுகளம் நரேன் என்று புகழத் தக்க அளவில் மாடுகளின் மேல் அதீத பாசம் கொண்ட அவர் மாட்டுச் சாணத்தைக் கூட மனிதன் மிதிக்கக்கூடாது என்கிற கண்டிப்புள்ளவர். 

அந்த சாணம்தான் நாளை திருநீராக போகிறது என்கிற மரியாதைதான்…

Read More