October 17, 2026
  • October 17, 2026
Breaking News

ஆல் பாஸ் திரைப்பட விமர்சனம்

by by Oct 9, 2026 0

படத்தின் தலைப்பை பார்த்து விட்டு இது ஏதோ கல்வி சம்பந்தப்பட்ட படம் என்று நினைத்து விட வேண்டாம். ஆனால், மனிதர்களுக்கு உழைத்து சம்பாதிக்கிற காசுதான் ஒட்டும் என்று ஒரு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் மைதீன். 

கஷ்டப்படும்போது எல்லா மனிதர்களுக்குள்ளும் புரிந்து கொள்ளலும் நெருக்கமும் இருக்கும். ஆனால் அதுவே கையில் நாலு காசு வந்து விட்டால் அது இருக்காது என்ற ஒரு உண்மையையும் இதில் சொல்லி இருக்கிறார். 

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலே ஜெயபிரகாஷ்தான். ரொம்ப நல்ல மனிதரான அவர்…

Read More

அன்பில் அவன் படத்தின் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்..! – அசோக் செல்வன்

by by Oct 8, 2026 0

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்..!

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர்…

Read More

லெனின் பாண்டியன் திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2026 0

ஒரு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் மண் மனம் மாறாத ஒரு நெகிழ்ச்சிப் படைப்பு.

மதுரைக்குப் பக்கமிருக்கும் ஒரு கிராமத்தில் ஆறு வறண்டு மணல் மேடுகளாக நிற்க, மணல் கொள்ளையர்கள் அங்கிருக்கும் நிலங்களை ஆக்கிரமித்து மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பற்றி விவசாயி கங்கை அமரன் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய ஆர்டிஓவையும் மணல் மாபியாக்கள் கொன்றுவடுகிறார்கள்.

நியாயம் கேட்க போலீஸ் ஸ்டேஷன் போன அமரனை அடித்து நொறுக்குகிறார் மாபியாக்களின் கையாளான போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட்.

இன்னொரு பக்கம் புதிதாக…

Read More

சண்டக்காரி திரைப்பட விமர்சனம்

by by Sep 20, 2026 0

ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க, அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் விமல்.

அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் காரணமாக அப்படி ஸ்ரேயா இழுத்த இழுப்புக்கு ஆடுகிறார் அவர். 

ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் குடியுரிமை சிக்கலுக்குள்ளாக, திருமணம்…

Read More

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின்  கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை..! – ஹிப்ஹாப் தமிழா ஆதி

by by Sep 19, 2026 0

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் உலகளாவிய திரையரங்க…

Read More

பாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்

by by Sep 17, 2026 0

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா? 

அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.

இளம் ஜோடிகளான விஜய் விஷ்வாவும் அர்ச்சனாவும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக தயாராகிறார்கள். 

இந்த நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அர்ச்சனாவின் அப்பா குரு சோமசுந்தரமும், அம்மா அனுமோலும் பிரிந்து வாழும் தகவல்…

Read More

தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்

by by Sep 16, 2026 0

இந்தத் தலைப்பு அறிமுகமான நாளிலிருந்தே நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டது. அப்படி இயக்குனர் பாலாஜி கிளறிய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்று பார்ப்போம்.

ஹாரர் வகை படம் போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது வாழ்ந்த தீர்க்கதரிசியான இளம் பெண் மீது ஊர்மக்கள் வைத்த மரியாதையைக் குறைக்கும் நோக்கில் அவதூறு பரப்பி அவள் உயிருக்கே உலை வைத்த தசரதன் என்கிற தீய எண்ணம் கொண்டவன் அதன் பிறகு கொடூரமாக இறந்து போகிறான்.

அதன்…

Read More

என்ன விலை திரைப்பட விமர்சனம்

by by Sep 16, 2026 0

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை.

முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர்.

அதிலும் இது போன்ற அவமானங்களால்  வசதி…

Read More

நாகராஜ் போல் என்னால் கதை சொல்ல முடியாது..! – இயக்குநர் சசி

by by Sep 12, 2026 0

‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத்…

Read More

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2026 0

வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார்.

சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார். 

சதா மது, சிகரெட் மூலம்…

Read More