September 15, 2026
  • September 15, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

மண்டாடி திரைப்பட விமர்சனம் (3.5/5)

by by Sep 11, 2026 0

ஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை.

அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.

ஹீரோவாக மாறியதில் இருந்து, தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து…

Read More

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2026 0

வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார்.

சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார். 

சதா மது, சிகரெட் மூலம்…

Read More

ஐ’ம் கேம் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2026 0

படத்தின் தலைப்பு மற்றும் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு இது ஏதோ Money Heist படமாகத்தான் இருக்கும் என்றுதான் தோன்றும். படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவே முழுக்கதை அல்ல.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பெரிய வீட்டு பிள்ளையான துல்கர் சல்மான் சூதாட்டங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் கடனாளியாக நிற்கிறார். சொந்தத் தொழில் ஆரம்பித்துக் கொடுத்தும் அதில் திறமையைக் காட்டாமல் இப்படி சூதாடிக் கொண்டு அலைவதை அவரது அப்பா கடுமையாக கண்டிக்க, அம்மாவோ கையில் இருக்கும்…

Read More

இம்மார்ட்டல் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2026 0

பெரும்பாலும் தலைப்பை உற்று கவனித்தாலே அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துவிடும். இந்த படமும் அப்படித்தான். 

‘அழிவில்லாத’ ஏதோ ஒன்று படத்துக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்டி படத்தை தொடங்குகிறார்கள். 

அங்கே கட் செய்தால் இப்போது தன்னுடைய மாமா லொள்ளு சபா மாறன் நடத்தும் அச்சகத்தில் வேலை பார்த்து வரும் ஜிவி பிரகாஷ், குறைந்த வாடகைக்கு ஒரு வீடு தேடிக் கொண்டிருக்கிறார். 

அப்போது…

Read More

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2026 0

மலையாளத்தில் உருவாகி தமிழ் பேசி வந்திருக்கும் இனிய காதல் படம். 

நடிப்புக்குப் பேர் போன நிவின் பாலியும், நளினத்துக்கு பெயர் போன மமிதா பைஜுவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமலு’வைக் கொடுத்த அதே இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கியிருப்பது சிறப்பு. 

முதல் காதலி இறந்து போன நிலையில் முதிர் கண்ணனாக வளைய வரும் நிவின்பாலியுடன் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் கல்லூரி மாணவியான மமிதா பைஜூ நட்புடன் பழக ஆரம்பித்து…

Read More

4 இடியட்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2026 0

தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு காமெடிப்படம் என்று புரிந்து போகும். அப்படி இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் நம்மைச் சிரிக்க.வைப்பதில் வெற்றி அடைந்தாரா என்பதுதான் சவால்.

புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் திருடர்கள். அவர்கள் நால்வரும் டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை பங்களாவில் பலகோடி ரூபாய் பணம் இருப்பதாக அறிந்து அங்கு திருடப் போய் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் அவர்களை ரவி மரியா தண்டிக்காமல் ஒரு உடன்பாட்டுக்கு வர,…

Read More

7 ஸ்டார் பாய்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Sep 3, 2026 0

நெல்லைச் சீமையில் நடக்கும் கதை. அங்குள்ள ஆத்தங்கரை என்னும் கிராமம் எந்த அளவுக்கு உலகத்துடன் போட்டி போட்டு முன்னேறி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் கால்பந்து விளையாட்டில் உலக ஆர்வமாக அந்த கிராமமே ஒரு Football Village ஆக இருக்கிறது

இயக்குனர் நிகில் பிரேம்ராஜ் சொல்லும் கதை 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் தொடங்குகிறது. 

கிராமத்தில் ஒருவர் விடாமல் கால்பந்து ரசிகராகவோ விமர்சகராகவோ இருக்க, அங்கு வாழும் பொடியன்கள் ஏழு பேர் உணவை…

Read More

ஒன்ஸ்மோர் திரைப்பட விமர்சனம்

by by Aug 30, 2026 0

இறுக்கமான வில்லனாகவே இதுவரை நமக்கு அடையாளம் தெரிந்த அர்ஜுன் தாஸுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல்களை ஏற்படுத்திக் கொடுக்க எப்படித்தான் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு பொறி தட்டியதோ தெரியவில்லை. 

கல்லூரிக் காதல் முடிவுக்கு வந்த கையோடு தற்கொலைக்கெல்லாம் முயன்று சதா சோகமாக தெரிந்து கொண்டிருப்பவரை அதிதி சங்கர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் விலகி விலகிப் போனாலும் ஒரு கட்டத்தில் அதிதியின் அதிதீவிர காதல் புரிந்து அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் அர்ஜுன் தாஸ். 

ஒரு வழியாக இரண்டு…

Read More

ஹய் (Hi) திரைப்பட விமர்சனம்

by by Aug 29, 2026 0

நயன்தாரா கதாநாயகியாக இருக்கும் தைரியத்தில் ரொம்பவும் மெலிதான லைன் ஒன்றை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன்.

கொங்கு மண்டலத்து வசதியான குடும்பத்து வாரிசு என்றாலும் காதலிப்பதற்கு ஓர் பெண் கிடைக்காமல் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறார் கவின். சொந்த அத்தை மகளை காதலிப்பதற்கு கூட பெரிதாக பிளான் எல்லாம் போட்டு பல்பு வாங்கியவர், “இனி நாங்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்…” என்று பெற்றோர் கே பாக்யராஜும், ராதிகாவும் கண்டிஷனாக கூறிவிட, ‘வந்தால்…

Read More

அமரம் திரைப்பட விமர்சனம்

by by Aug 28, 2026 0

மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. ஆனால் கிழக்கு மலை தொடர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய பட பதிவுகள் குறைவுதான். 

அந்தக் குறையை நிறைவு செய்ய வந்திருக்கிறது இந்தப் படம். இயல்பாகவும் இயற்கைக்கு மனிதன் செய்த கொடுமையின் விளைவாகவும் அந்த பகுதிகளில் மழை பொய்த்து போய் விவசாயமும் விழுந்து கிடக்க, வேறு வழி தெரியாதவர்கள் வாழ்வாதாரமாக வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். 

அந்தக் குழுவுக்கு என்று ஒரு…

Read More