April 28, 2024
  • April 28, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

பிரேமலு திரைப்பட விமர்சனம்

by by Mar 15, 2024 0

இந்த மல்லுவுட்காரர்களுக்கு இருக்கும் நக்கல் வேறு யாருக்கும் வராது. இதுவும் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு (ரெட் ஜயண்ட் புண்ணியத்தால்) தமிழ் பேசி வந்திருக்கும் படம்தான்.

இதில் என்ன நக்கல் என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப் படம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் ஒரு காதல் படம் என்பதால் அப்படி நக்கலாக ‘லு’ போட்டு டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

அத்துடன் ஒரு ரொமான்டிக் காமெடி படத்துக்கு இதை விடப் பொருத்தமான தலைப்பை வைக்க முடியாது. காதலுக்குக் காதலும்…

Read More

காமி (Gaami) தெலுங்குப்பட விமர்சனம்

by by Mar 13, 2024 0

பட ஆரம்பத்தில் இருந்து மூன்று கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

முதல் கதையில் அகோரி குழுவில் வளரும் நாயகன் விஸ்வக் சென்னை, அந்த அகோரி  குழுவினர் வெளியேறச் சொல்கின்றனர். காரணம், அவருக்கு மனிதர்கள் தொட்டால் சிலிர்த்து மயக்கம் வரும் வினோதமான உடல் தன்மை இருக்க, அது தெய்வத்தின் சாபம் என்பதால் அவரை அகோரிகள் விரட்டுகின்றனர்.

அங்கு இருக்கும் நல்ல மனம் கொண்ட அகோரி ஒருவர், வாரணாசி சென்று அவரை அங்கு விட்டுச் சென்ற பாபாவை சந்தித்தால் இந்த சாபத்தின் விமோசனம்…

Read More

கார்டியன் திரைப்பட விமர்சனம்

by by Mar 10, 2024 0

வில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா பேயாகி தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் கதை ஒன்றும் புதிதில்லை. அதற்கு அந்தப் பேய் உயிருடன் இருக்கும் ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்வதிலும் எந்த புதிய சிந்தனையும் இல்லை.

ஆனால் பேய் என்றாலே கொடூரமாகவும் அவலட்சனமாகவும் இருக்க வேண்டுமா..? ஹன்சிகாவைப் போல் அழகான பேய், உலகில் இருக்காதா..? என்று இயக்குனர்கள் சபரியும் குரு சரவணனும் நினைத்திருப்பது ஒன்று மட்டும்தான் இதில் புதிய ஐட்டம்.

பிறந்ததிலிருந்து ஹன்சிகா ஒரு அதிர்ஷ்டக் கட்டையாம். அவர்…

Read More

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம்

by by Mar 8, 2024 0

படத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளித்து, தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களை பத்தாம் பசலிகள் லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

ஆக்கத்தில் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்தப் படம் என்று கட்டியம் கூறியே ஆரம்பிக்கலாம்.

நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது.

காமம் மனத்தில் அடர்த்தியாக நிற்க, வாழ்வில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று புரிய வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள் பலரும்…

Read More

ஜெ பேபி திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2024 0

அனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது.

கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால்தான்…

Read More

அரிமாபட்டி சக்திவேல் திரைப்பட விமர்சனம்

by by Mar 6, 2024 0

திருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம்.

சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி.

ஊர்ப்பொதுவில் வைத்து அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு அன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் போகும் ஒரு கும்பல் அவர்களைக் கொன்று தீர்க்கிறது. அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கு ஏறிய கிராமம்.

மேற்படி…

Read More

போர் திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2024 0

இரண்டு கல்லூரிப் பருவ மாணவர்களின் சிறு வயது அக்கப்போர், ஒரு பல்கலைக்கழகத்தையே வைக்கோல் போராகப் பற்றி எரிய வைப்பதுதான் கதை.
 
அந்த இரண்டு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம். அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் இருப்பதாகக் கதை விட்டிருக்கிறார்… அல்ல… அல்ல… கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்.
 
நமக்கென்னவோ கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் போதை வஸ்துகள், அடிதடி, அராத்து மாணவர்கள், அவர்களின் ‘பலான’ பழக்க வழக்கம் என்று புழங்கும் அந்தப் பல்கலைக்கழகம், கலாப தேசமான …

Read More

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2024 0

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது.

பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார். அடிபட்டிருப்பது தன் மனைவி என்றும் தன்னுடைய பெயர் ரகு என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார்.

பத்து நாட்கள் அந்த மருத்துவமனையில் உணவருந்தாமல் (!) தூங்காமல் (!!) மனைவி…

Read More

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம்

by by Mar 1, 2024 0

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒரு ஹீரோயினை ஹீரோ பார்த்தார்- அடுத்தடுத்து பார்த்து காதல் கொண்டார்- அந்த காதலி மெல்ல மெல்ல அவரைக் காதலிக்க தொடங்கினாள் – பின்னர் ஹீரோவின் தொழில் தெரிந்து அவரை விட்டு விலகினார்… என்றெல்லாம் நீட்டி வளைத்துக் கதை சொல்லாமல் முதல் இரண்டு காட்சிகளிலேயே சிதறுகாய் போல் ஹீரோ, ஹீரோயினது அறிமுகத்தை முடித்து…

Read More

அதோமுகம் திரைப்பட விமர்சனம்

by by Feb 27, 2024 0

நெடிய பாதையில் வாகனம் ஓட்டிப் பந்தயம் வெல்வது ஒரு வகை. ஆனால், ஒரு சிறிய கோளத்துக்குள் வாகனம் ஓட்டுவது வேறு வகை.

அப்படித்தான் இந்தப்பட இயக்குனர் சுனில் தேவுக்கு இவ்வளவுதான் பட்ஜெட் – இதற்குள் ஒரு படம் எடுத்து அசத்த வேண்டும் என்கிற நெருக்கடி இருக்க, அதற்குள் அதை சாதித்து இருக்கிறாரா பார்ப்போம்.

மலையும் மலை சார்ந்த இடங்களும் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லர்களுக்கு ஏதுவானவை. அப்படி ஊட்டியில் தனி பங்களாவில் தன் காதல் மனைவியுடன் வசிக்கும் நாயகன் எஸ்.பி.சித்தார்த்துக்கு…

Read More