இரட்டையர் திரைப்பட விமர்சனம்
பெத்தி திரைப்பட விமர்சனம்
சமீப காலத்தில் மலைவாழ் மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றி இந்தியப் படங்கள் அதிகம் பேச ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் எந்த அடையாளமும் இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்தினரைப் பற்றிய கதை இது.
அந்த கிராமத்துக்குப் பெயரும் கிடையாது. அங்கு வாழும் மக்கள் இந்தியர்கள்தான் என்பதற்கான எந்தவிதமான அடையாளச் சான்றும் கிடையாது. ஆனாலும் அவர்கள் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..?
அதற்காக ஆதிக்க ஜாதிகள் வாழும் கிராமத்துப் பக்கம் போய் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். அதுவும் ஒருவர்…
Read More
பரிமளா அண்ட் கோ திரைப்பட விமர்சனம்
தலைப்பையும் புகைப்படங்களையும் பார்த்தால் இது ஒரு குடும்பத்துக்கு சொந்தமான கடையைப் பற்றிய படம் போல இருக்கும். ஆனால் அதெல்லாம் இல்லை – குடும்பத்தைப் பற்றிய படம்தான்.
அப்படியானால் படத்துக்குள் ஜெயராம் ஊர்வசி ஜோடியாக இருப்பதால் ஊர்வசியைப் பற்றிய படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஏனென்றால் படத்தில் பரிமளா என்பது ஊர்வசி இல்லை. ஜெயராமுக்குத்தான் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த தம்பதி, யோகிபாபுவின் வீட்டில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்கள்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா…
Read More
சம்ஹாரம் திரைப்பட விமர்சனம்
ஒரு இரவில் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை.
ஒரு பக்கம் வயல் காட்டுக்குள் முகமூடி அணிந்த ஒரு உருவம் இருவரை அடித்துக் கொலை செய்கிறது.
இன்னொரு பக்கம் அடுத்த நாள் மாமன் மகனுடன் திருமணம் ஆக இருக்கும் நிலையில் நாயகி ஷருமிஷா தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வெளியேறும் தருணம் அண்ணன் பிரஜினின் பிடிக்குள் சிக்குகிறார்.
ஷருமிஷாவை ஒரு அறைக்குள் அடைக்கும் பிரஜின், தன் மனைவி, காவலாளி இருவருடன் அந்த இரவை தூங்காமல்…
Read More
பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்
இந்தப் படத்தின் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ் கமலின் தீவிர ரசிகர் போல் இருக்கிறது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் அதன் அடிநாதமான வசனத்தை கமல் ஓரிடத்தில் பேசுவார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர்கள் நமது உறவினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை…” என்பதுதான் அது.
அந்தப் படத்தில் மட்டுமல்ல, இந்தப் படத்திலும் அடிநாதம் அதுதான்.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன் தனது மகளையும் ஒரு கராத்தே சாம்பியனாகவே வளர்க்கிறார். “கண்ணெதிரே அநியாயம் நடக்கும்போது பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ, அநியாயம்…
Read More
ஈகோ ராமன் திரைப்பட விமர்சனம்
ஒரு தலைமை ஆசிரியர் மாணவனை திருத்தினால் அது வழக்கமான கதை. ஆனால், இந்தப் படத்தில் ஒரு பள்ளி மாணவன் தலைமை ஆசிரியரைத் திருத்துகிறான் என்பதுதான் வித்தியாசம்.
ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராகும் ரோபோ சங்கர், தான் என்ற எண்ணம் கொண்ட ஈகோ நிறைந்தவராக இருக்கிறார். அவர் ஈகோவை சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கிறார். அத்துடன் சாதி வெறியராகவும் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் நாயகன் சிபி புவனச்சந்திரன். அவருக்கு…
Read More
வாரண்ட் (Zee 5 Original) இணையத் தொடர் விமர்சனம்
தமிழ் இணையத் தொடர்கள் மீது ரசிகர்களின் கவனம் பதியத் தொடங்கியதே Zee5 -ல் வெளியான ‘விலங்கு ‘ இணையத் தொடருக்குப் பிறகுதான்.
அதை எழுதி இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்த வாரண்ட் தொடரின் கதையை எழுதி இருப்பதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
காவல்துறை பற்றிய நாம் அறியாத விஷயங்கள் இவருக்கு மட்டும் எப்படித் தெரிகின்றனவோ தெரியவில்லை.
விலங்கு தொடர் போலவே இந்த தொடரிலும் காவல்துறைக்கு உள் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இதில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்.
கதை இதுதான்.
அப்பா பாலாஜி சக்திவேல் ஆசைப்படுவதன்…
Read More
சட்டென்று மாறுது வானிலை திரைப்பட விமர்சனம்
‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..?
அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய். மீனாட்சி யின் அழகாலா? என்றால் “ஆமாம். ஆனால் புற அழகால் அல்ல… அகத்தின் அழகால்..!” என்று ஓரிடத்தில் காரணம் சொல்கிறார் ஜெய்.
அப்படி என்ன…
Read More
கருப்பு திரைப்பட விமர்சனம்
கருப்பு கோட்டு போட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்துக்குள் நடக்கும் லஞ்ச லாவண்யங்களை கண்டும் காணாமல் நடமாடும் சிலைகளாக இயங்கிக் கொண்டிருக்க, நீதிமன்ற வாசலில் சிலையாக அமர்ந்திருக்கும் கருப்பசாமிக்கு கோபம் வந்து அவரே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் கதை.
கடவுளே வந்தாலும் காரியம் ஆக வேண்டுமானால் கணக்கில்லாமல் காசை விசினால்தான் முடியும் என்றிருக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு அராத்து டீமை வைத்துக்கொண்டு அதற்காகவே வழக்குகளை இழுத்தடித்துக் கொண்டிருக்க, அவரிடம் வசமாக வந்து சிக்குகிறார் கேரளத்திலிருந்து மகளின் உயர்…
Read More
’29’ திரைப்பட விமர்சனம்
டீன் ஏஜ் முடிவடையும் 19 வயதிலிருந்து இருபதாவது வயதிற்கு மாறுவது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான கட்டமாகும். அதற்குப்பின் 29 வயது முடிந்து 30 ஆகும்போது அவன் முழுமை பெற்று இருக்க வேண்டும்.
அந்த வகையில் 29 வயது என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கிறது.
அந்த வயதில் இருக்கும் நாயகன் விது, தான் யார் என்ற அடையாளத்தை அடையாமலேயே இருப்பதாக உணர்கிறார். அதைத் தேடி சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தும், ரசனை இல்லாத வறட்சியாகவே…
Read More