வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது.
ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஒருவருடமாக மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்.
மனமொத்து இந்த முடிவை மேற்கொண்டதால் இருவரும் இனி நண்பர்களாகத் தொடரப்போவதாகவும், ஆனால் அருமை மகன் ஆர்யாவின் நல்வாழ்வை எண்ணி அவனுக்குப் பெற்றோராக நீடிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருகிறார்.