August 14, 2026
  • August 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இளனைப் பார்க்கும்போது இன்னொரு பாக்யராஜ் போல தோன்றியது..! – நடிகர் செந்தில்

by by Aug 12, 2026 0

*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,

ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே…

Read More

மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்..!

by by Aug 9, 2026 0

*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 

நாற்பது…

Read More

இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு..! – விஷால்

by by Aug 8, 2026 0

அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஷால் இப்போது இயக்குனராகி இருக்கும் படம் ‘ மகுடம் ‘. மாறுபட்ட தோற்றங்களில் அவரே நடித்திருக்கும் இந்தப் படம் ஆர் பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்-இன் 99 வது தயாரிப்பாக அமைகிறது. 

இந்தப் படத்தின் பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் நடிகர் விஷால் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம்..!

ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை…

Read More

வதந்தி சீசன் 2 – வெப் தொடர் விமர்சனம்

by by Aug 8, 2026 0

வழக்கமாக தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாக கொண்டு வரும் கதை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது சசிகுமாரை தான். அதிலும் பல்லாண்டு பிடித்த ஒரு அடாவடி கேரக்டரில் தான் அவர் நினைவுக்கு வருவார். 

அதை மாற்றி அவரை மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளராக காண்பிக்க நினைத்ததற்கு இந்த தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசை பாராட்டியாக வேண்டும்.

அப்படி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, அது அரசு நிகழ்ச்சிக்கான…

Read More

போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2026 0

இந்த மண்ணுக்கு மரங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்வதுதான் படத்தின் மையக்கரு. ‘இந்த பூமியின் கடைசி மரமும் விழுந்து விட்டால் ஒரு உயிர் கூட இங்கே மிஞ்சாது…’ என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல வந்த இயக்குனர் அஷ்ரப், அதைத் தானே எழுதி நடித்து ‘விஷுவல் ட்ரீட்’டாக சொல்லி இருக்கிறார்.

அப்படி இருக்கும் மரங்களுக்கு எல்லாம் ஆதிமரமான தாய் மரம் ஒன்று இருப்பதாக தன் தாய் சொன்னதை நம்பும் மகனான நாயகன் அஷ்ரப், அந்த அரிய மரத்தைப் புகைப்படம்…

Read More

ஹெச். ராஜாவை தமிழ்நாட்டு முதலமைச்சராகிய எஸ்.ராஜா..! – ‘செய் செய்யாதே’ பட விழா சுவாரஸ்யம்

by by Aug 7, 2026 0

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..!

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்…

Read More

டிசி (DC) திரைப்பட விமர்சனம் (3.5/5)

by by Aug 7, 2026 0

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் உரிமை போலீசுக்கு இருக்கிறது. ஆனால் அந்த போலீசே தவறு செய்தால் அவர்களை யார் தட்டிக்கேட்பது..?

அப்படித் தட்டிக் கேட்ட சாமானியன் நாயகன் லோகேஷ் கனகராஜ் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். அது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது. 

ஆனது ஆயிற்று, போலீஸ் துரத்தும் குற்றவாளியாக மாறிய பின் வேறு என்ன செய்வது என்று தனக்கு நியாயமானவை என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதற்காக எந்த எல்லைக்கும் சென்று அதைச் செய்து வருகிறார் லோகேஷ். அதில் பல வன்முறைச்…

Read More

வரவேற்பைப் பெறும் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்!

by by Aug 3, 2026 0

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு..!

50% படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக்…

Read More

நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி கிடைக்கும்..! ‘விஸ்வநாத் & சன்ஸ்’ விழாவில் சூர்யா

by by Aug 3, 2026 0

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. 

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா…

Read More

வதந்தி சீசன் 2 வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன்..! – சசிகுமார்

by by Aug 2, 2026 0

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்…

Read More