December 2, 2024
  • December 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி
March 3, 2020

முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி

By 0 722 Views

தமிழில் போல்ட் ஆன நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பியூட்டிஃபுல் ஆன நடிகைகளும் ஏராளம். ஆனால், இஅர்ண்டும் கலந்த பிளென்ட் ஒருசிலருக்கே அமைந்தது. அந்த வகையில் போல்ட் & பியூட்டிபுல் நடிகையாம இந்த தலைமுறையில் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இதையெல்லாம் பேசக்கூடாது என்ற போலியான பகட்டு இல்லாமல் பளிச்சென்று உண்மையை உடைத்துப் பேசக் கூடியவர்.

சமூக ஆர்வலருமாக இருக்கும் வரலட்சுமி மார்ச் மாசம் 5-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த வகையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.

இதில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னையும் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தன் பேட்டியில் “வாய்ப்பு தருவதற்காகப் படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை எனக்கும் வந்துச்சு. ஆனால் அதை நான் வெளியில் கொண்டு வந்துட்டேன். நான் இவை அனைத்தையும் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் ‘முடியாது’ என்று சொல்லக் கற்றுக் கொண்டேன். சரத்குமாரின் மகள் என்பதைத் தாண்டியும் அந்த பிரச்சனைகள் எனக்கு வந்தன.

இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளும் என்னிடம் இருக்கின்றன. எனக்கு வெற்றி தாமதமாகத்தான் கிடைத்தது. ஒப்புக் கொள்கிறேன். சிலர் என்னை ஒதுக்கினார்கள். ஏனென்றால் நான் மிகவும் சரியாக இருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை. இன்று நான் 25 படங்களில் நடித்து முடிந்திருக்கிறேன். 25 நல்ல தயாரிப்பாளர்கள், 25 நல்ல இயக்குநர்களோடு பணிபுரிந்துவிட்டு தற்போது என்னுடைய 29-வது படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் முதலில் சரி என்று சொல்லிவிட்டு அதன்பிறகு வந்து புகார் செய்து பயனில்லை. முதலிலேயே முடியாது என்று சொல்லுங்கள். இதுதான் நான் சொல்ல விரும்புவது..!”

இதைப் பின்பற்றுங்க புது முகங்களே..!