October 17, 2026
  • October 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்லும் ‘ஹைக்கூ..!’

by by Oct 7, 2026 0

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும்…

Read More

என் நேர்மையும், நம்பிக்கையும் திமிர் என்றால் அப்படியே இருக்கட்டும்..! – அட்லீ

by by Oct 7, 2026 0

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார்…

Read More

டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don’t trouble the trouble) திரைப்பட விமர்சனம்

by by Oct 7, 2026 0

ஆன்மா என்பது உயிருள்ள உடல். ஆத்மா என்பது உயிரற்ற உடல். இவை இரண்டும் ஒரு சூழலில் இணையும் போது ஏற்படும் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை. 

பணம் பணம் என்று அலையும் ஆன்மாவாக வரும் ஃபஹத் பாசில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். அது ஏன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்க வேண்டும் என்பதற்கு பின்னால் ஒரு காரணம் வருகிறது.

அப்படி ஏகப்பட்ட தகிடு தித்தம் செய்து உள்ளூர் தாதாவிடம் பிரச்சனை செய்து இரண்டு நாட்களில் 20 லட்சம் ரூபாயை…

Read More

ஏழுகடல் ஏழுமலை திரைப்பட விமர்சனம்

by by Oct 4, 2026 0

இயக்குனர் ராமின் படைப்புலகம் அலாதியானது. பேரன்புக்குள் நம்மை ஆட்படுத்துவது. இதே விஷயங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன வெளியாகி இருக்கும் அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும்.

ஒரு நவீன ஓவியம் எப்படி பார்ப்பவரின் மனதுக்குள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல விளைவுகளை ஏற்படுத்துகிறதோ அப்படியே ராமின் படங்களும் பார்வையாளர்களின் மனதுக்குள் அவரவர் ரசனைக்குத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

படைக்கப்பட்ட ஓவியத்தின் பொருள் குறித்து படைத்த ஓவியனின் கருத்து என்னவாக இருக்கிறதோ அதிலிருந்து பார்வையாளன் புரிந்து கொள்ளும் கருத்து மாறுபட்டு இருக்கலாம்….

Read More

சிக்மா திரைப்பட விமர்சனம்

by by Oct 3, 2026 0

சினிமாவைப் பொருத்தமட்டில் எல்லாத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் வாரிசுகளும் ஹீரோவாக புகழ் பெறவே விரும்புகிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. 

ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயின் மகன் அப்படி எளிதாக கிடைக்கக்கூடிய சொர்க்க வாசலை விட்டுவிட்டு ஒரு இயக்குனராக வேண்டும் என்கிற வேட்கையுடன் களம் இறங்கி இருப்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தை விமர்சிக்க தொடங்கலாம். 

அப்பா பட்ட கடனுக்காக பொறுப்பேற்று தானும் கடனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் கிஷன்…

Read More

அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

by by Oct 2, 2026 0

காதல் எத்தனை வலிமையானது… தன் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பு வைப்பான் என்று சொல்லும் கதை.

காதலின் காரணத்தால் தன் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு காதலன் அசோக் செல்வனை கைப்பிடித்து போதாமையில் வாழ்ந்து வருகிறார் பிரீத்தி முகுந்தன்.

அவரது ஆசை ஒன்றே ஒன்றுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் வீட்டை வாங்கி அதை ஹோம் ஸ்டேவுக்கு வாடகைக்கு விட்டு வசதியாக வாழ வேண்டும் என்பது. எனவே இந்த பற்றாக்குறை வாழ்க்கையை விட்டு அவரை அவரது கனவு வாழ்க்கைக்குள்…

Read More

சிக்மாவுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன்..! – இயக்குனர் ஜேசன் சஞ்சய்

by by Oct 2, 2026 0

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.

கலை இயக்குநர் பெஞ்சமின்,…

Read More

பத்தா திரைப்பட விமர்சனம் (4/5)

by by Oct 1, 2026 0

விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறதென்ற எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக அமைந்த படம். அவருக்கென்றே எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.

சிறுவயதில் நாம் படித்திருக்கும் அரக்கன் கோலியாத்தை எதிர்கொண்டு வென்ற சிறுவன் டேவிட்டின் கதையை ஒற்றிய லைன். இங்கே அடங்க மறுக்கிற தாதாவாக இருக்கும் விஜய் சேதுபதியை எளிய சிறுவன் சாய் பிருத்விராஜ் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.

தன் பெயரை கேட்டாலே அலரும் ஏரியாவை கலங்கடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கட்டத்தில் பார்த்து பயம்…

Read More

கிட்டி திரைப்பட விமர்சனம்

by by Sep 30, 2026 0

மர்டர் மிஸ்டரி கதைகளில் கொஞ்சம் புதுவிதமான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ். படத்தொடக்கமே இரண்டு கொலைகளில் தொடங்குகிறது.

ரவுடி ஒருவரும் இளம்பெண் ஒருத்தியும் அடுத்தடுத்து கொல்லப்பட, அந்தக் கொலைகளை செய்தவன் நான்தான் என்று நாயகன் அசோக் போலீசில் சரணடைகிறார். 

அவரை போலீஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்த, குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்து கோர்ட்டில் சமர்ப்பிக்க சொல்கிறார் நீதிபதி. 

அதற்காக களம் இறங்கும் காவல் அதிகாரி யுவனுக்கு அடுத்தடுத்து விசாரணையில் ஏற்படும் திருப்பங்கள் மிகப்பெரிய தலைவலியை தருகின்றன.

தான் இரண்டு கொலைகளை…

Read More

ஃபஹத் பாசில் இமேஜுக்குள் சிக்கிக் கொள்வதில்லை..! – சூர்யா

by by Sep 30, 2026 0

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம்…

Read More