October 17, 2026
  • October 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

டோரதி போன்ற படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை..! – கீர்த்தி சுரேஷ்

by by Sep 23, 2026 0

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும்…

Read More

படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்..! – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

by by Sep 23, 2026 0

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம்,…

Read More

நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்..! – அசோக் செல்வன்

by by Sep 22, 2026 0

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா..!

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும்…

Read More

சண்டக்காரி திரைப்பட விமர்சனம்

by by Sep 20, 2026 0

ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க, அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் விமல்.

அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் காரணமாக அப்படி ஸ்ரேயா இழுத்த இழுப்புக்கு ஆடுகிறார் அவர். 

ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் குடியுரிமை சிக்கலுக்குள்ளாக, திருமணம்…

Read More

பீப் (BEEP) திரைப்பட விமர்சனம்

by by Sep 20, 2026 0

படத்தின் தலைப்பைப் பார்த்து உங்களுக்கு சிம்பு ஞாபகம் வந்தால் நீங்கள் ரசிகப் புலி. ஆனால், படம் அதைப் பற்றியதல்ல.

ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே அதை வைத்து அங்கே நடந்ததைக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் முதுநிலை டிகிரி படிக்கும் நாயகன் ராகவுக்கு இருக்கிறது. எனவே, அதைக் கொண்டு அவர் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானே நியதி..?

அத்துடன் பிரபல நடிகை ஒருவரின் பரம ரசிகராக இருக்கும் அவர் அந்த நடிகையையைச் சந்திக்கும் முயற்சியில்  யாமினி லக்ஷ்மணன் நட்பு கிடைக்கிறது. Read More

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின்  கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை..! – ஹிப்ஹாப் தமிழா ஆதி

by by Sep 19, 2026 0

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் உலகளாவிய திரையரங்க…

Read More

மண்டாடிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது..! – சூரி

by by Sep 18, 2026 0

‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா!

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘.

இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பீட்டர்…

Read More

தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி..! – நானி

by by Sep 18, 2026 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி,…

Read More

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி..! – ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது

by by Sep 18, 2026 0

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகளைப்…

Read More

பாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்

by by Sep 17, 2026 0

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா? 

அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.

இளம் ஜோடிகளான விஜய் விஷ்வாவும் அர்ச்சனாவும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக தயாராகிறார்கள். 

இந்த நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அர்ச்சனாவின் அப்பா குரு சோமசுந்தரமும், அம்மா அனுமோலும் பிரிந்து வாழும் தகவல்…

Read More