October 23, 2026
  • October 23, 2026
Breaking News
October 23, 2026

செங்கேணி திரைப்படம் தொடக்கம்..!

By 0 16 Views

ஜிஜி பிலிம் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக *செங்கேணி* என்னும் திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர்  கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தொழில்நுட்ப கலைஞர்களாக பிரபல இசையமைப்பாளர் திரு N. R. ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடலுக்கான வரிகளை யுக பாரதி எழுதுகிறார்.

சின்ராஜ் ராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு கலை இயக்கப் பணிகளை B. சேகர் மேற்கொள்கிறார். இவர் கோட்ட, சர்தார் 2 மற்றும் அமரன் ஆகிய திரைப்படங்களின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த திரைப்படத்தின் வசனத்தினை  திருப்பதி ராஜா கோவிந்தராஜ் எழுத ஆடை வடிவமைப்பு பணிகளை மரியா மிலன் மேற்கொள்கிறார்.

மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் பங்கு பெற இருக்கிறார்கள். 

இதன் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் துவங்க இருக்கிறது,