March 29, 2024
  • March 29, 2024
Breaking News
April 11, 2019

ரசிகர்கள் விருப்பத்துக்கு செவிசாய்த்த பிரபாஸ்

By 0 791 Views
லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். பிரபாஸின் ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் வருகையை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். அந்த அன்பின் காரணமாக, இன்ஸ்டாகிராம் என்ற இந்த சமூக ஊடகத்தில் இணைந்திருக்கிறார் பிரபாஸ். 
 
‘பாகுபலி’ என்ற ஒரு நம்பமுடியாத இமாலய வெற்றியை பெற்ற பிரபாஸ், அங்கேயே நின்று விடாமல், தொடர்ந்து ‘சாஹோ’ என்ற இன்னும் ஒரு மிக பிரமாண்ட படத்தை அறிவித்தார். சாஹோ படத்தின் ஒவ்வொரு தகவலும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
 
இந்த சினிமா சுவாரஸ்யம் தாண்டி ரசிகர்கள் பிரபாஸிடம் கேட்டுக் கொண்டிருந்தது அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நெருக்கமாக அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பது தான். அதனால்தான் மேற்படி இன்ஸ்டாகிராம் இணைப்பு.  
 
சாஹோ பற்றிய ஒரு முன்னோட்டம். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார் பிரபாஸ். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
 
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் மற்றும் விக்ரம் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படம் சர்வதேச திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது.
 
இன்ஸ்டாகிராமில் சாஹோ ஸ்டில் விட்டா பத்திக்குமே..?!