November 27, 2026
  • November 27, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • சிட்டுக்குறிஞ்சி திரைப்பட விமர்சனம்
November 26, 2026

சிட்டுக்குறிஞ்சி திரைப்பட விமர்சனம்

By 0 40 Views

ஆணவக்கொலை, காதல், மர்மம் மற்றும் மறுபிறவி ஆகியவற்றை வைத்து  கொடைக்கானல் பின்னணியில் புனையப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி.

ஆணவக்கொலையால் உயிரிழந்த ஒரு தமிழ்த் தம்பதியின் ஆன்மாக்கள், மறுபிறவியில் மலையாள இளைஞராகவும் (ரஜித் சி.ஆர்) நெல்லூர்ப் பெண்ணாகவும் (தீப்ஷிகா) கொடைக்கானலில் மீண்டும் சந்திக்க, அவர்களின் நிறைவேறாத காதலும், கிளைமாக்ஸில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களுமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன.

கதாநாயகன் ரஜித் சி.ஆர் தனது இயல்பான நடிப்பாலும், குறிப்பாகக் குற்றவுணர்ச்சி மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களில் வரும் தீப்ஷிகா தனது துடிப்பான நடிப்பால் படத்திற்கு உயிரோட்டம் அளித்துள்ளார்.

இவர்களுடன் ஜி.எம். குமார், ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண், விஜே பப்பு உள்ளிட்டோரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியின் இயற்கை அழகை பிரான்சிஸ் ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகக் காட்டியுள்ளது.

மாராவின் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கிறது.:

சமூக அவலமான ஆணவக்கொலையை ஆன்மாக்கள் மற்றும் மறுபிறவி என்ற கற்பனைக் கோணத்தில் இயக்குநர் மீனாட்சி சுந்தரம் அணுகியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

இருப்பினும், படத்தின் முன்பகுதி சற்று மெதுவாக நகர்வதும், திரைக்கதையில் கூடுதல் வலிமை இல்லாததும் சிறிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ரஜித் மற்றும் தீப்ஷிகாவின் உணர்வுப்பூர்வமான நடிப்புதான்.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட ஒரு பரிசோதனை முயற்சியை விரும்புபவர்களுக்கு இந்தப்படம் ஒரு வித்தியாசமான திரையனுபவமாக அமையும்.

சிட்டுக்குறிஞ்சி – வித்தியாசமான முயற்சி..!

– வேணுஜி