September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்
October 26, 2018

வட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்

By 0 1512 Views

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆன்ட்ரியா நடித்து கடந்த அக்டோபர் 17-ம்தேதி வெளியான வடசென்னை படத்துக்கு மீனவ சமுதாய மக்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் விடப்பட்டன.

அதில் முக்கியமானது அமீர், ஆன்ட்ரியா இடம் பெற்றுள்ள முதலிரவுக் காட்சி. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில ஆபாச வசனங்களும் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்க, இப்போது அந்தக் காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல காம்போ என்று பெயரெடுத்த வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் மேற்படி இந்த செயல்பாட்டால் 10வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வட சென்னை படம் மேலும் பல தரப்பட்ட மக்களும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக அமைந்திருக்கிறது.

கோரிக்கைக்கு செவி மடுத்த வட சென்னை டீமுக்கு வாழ்த்துகள்..!