ஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை.
அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
ஹீரோவாக மாறியதில் இருந்து, தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து வரும் மண்டாடி வகையறா சத்யராஜிடம் பயிற்சி பெறுபவர்களாக சூரியும், சுஹாசும் நடித்திருக்கிறார்கள் இணை பரியாத நண்பர்களாக இருவரும் இருக்க, சத்யராஜின் மகளாக வரும் மகிமா நம்பியாரே சூரி காதலித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்த சுஹாஸ் செயல்பாட்டினால் சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகிறார் சூரி அதனால் மகிமா அவரை வெறுக்க, சத்யராஜின் நன்மதிப்பை பெற சூரிய சுகாசுக்கு எதிராக, சூரிய கொலை செய்ய திட்டமிடுகிறார் சுகாஸ்.
அந்தக் குறியில் சூரியை தப்பவிட்டு தான் பலியாகிறார் சத்யராஜ். இதெல்லாம் தெரியாமல் மகிமா சூரி மீது கடும் கோபம் கொண்டு தந்தையின் சாவுக்கு காரணமானவர் என்று அவரை வெறுத்து ரவீந்திர விஜய்யை திருமணம் செய்து கொள்ள, ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விடுகிறார் சூரி.
வருடங்கள் உருண்டோட மகிமா நம்பியாரின் வாலிப வயது மூத்த மகனுக்கும் சுகாசின் மகனுக்கும் ஏற்படும் தகராறில் சூரியன் உதவி கேட்டு வந்து நிற்கிறார் மகிமாவின் மகன் மிதுன் ஜெய்சங்கர்.
அதற்காக மீண்டும் ஊருக்குள் வரும் சூரி, மாரியை கொண்டு ஒரு குழு அமைத்த மீண்டும் படகு போட்டிக்கு தயாராகிறார். அதில் வெகுண்டெழும் சுகாஸ் எப்படி எல்லாம் எதிர்வினை புரிந்தார் அது எப்படி எல்லாம் இந்த கதையின் பக்கங்களை திருப்பி போட்டது என்பது பின் பாதிக்கதை.
முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, ஒரே அடியாக மாசு காட்டாமல் கதையின் நாயகனாக வந்திருப்பது சிறப்பு. தேவையான இடங்களில் ஆக்சன், ரியாக்ஷன், அமைதி, ஆர்ப்பரிப்பு என்று எல்லாவிதமான உணர்ச்சிகளிலும் பரிமளித்திருக்கிறார்.
அவரது அமைதியான காதல் இறுதிவரை நீண்டு வருவது அழகான கவிதை.
வில்லனாக நடித்திருக்கும் சுஹாஸ், வாலிப வயதிலும் சரி ஒரு வாலிபனுக்கு தந்தையான வேடத்திலும் சரி பக்காவாக பொருந்தி இரக்கிறார் . அப்பாவை நடைப்பினம் ஆக்கியதற்காக சூரி மீது அவருக்கு இருக்கும் கோபம் நியாயமாகவே இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் எல்லா பெண்களையும் போலவே அவசரப்பட்டு முடிவெடுத்து சூரியை புரிந்து கொள்ள முடியாமல் போவது பரிதாபம். ஆனால் தன் காதலைப் பற்றி மகனிடம் விவரிக்கும் போது தமிழ் பெண்களின் கலாச்சார திலகமாக தெரிகிறார்.
இடைவேளையில் இன்றி கொடுத்தாலும் சத்யராஜின் பாத்திரம் கதையை நங்கூரம் இடடு நிறுத்துகிறது. ஒரு கட்டத்தில் சூரியன் கடிந்து கொண்டாலும் கடைசியில் அவரது உயிரைக் காப்பாற்ற போராடும் அவரது பாத்திரம் மனதில் நிற்கிறது.
மகிமாவின் மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், அந்த வயதுக்கு உரய வேகத்தையும் தடுமாற்றத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூரியின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் படத்தின் நகைச்சுவை பகுதிக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய் கவனிக்க வைக்கிறார்.
இவர்களுடன் சுஹாஸின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா, ராம்ஸ், பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிரிஷ் ஹாசன் உள்ளிட்டோர் பாத்திரங்களில் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார்கள்.
கடலுக்குள்ளேயே பெரும்பகுதி படம் நடப்பதால் அலைகள் மீது தனி ஆவர்த்தனம் நடத்தி பாராட்டு பெறுகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். பிரமிக்க வைக்கும் படப்பிடிப்புக்கு இந்த வருட விருதுகள் இவரை குறி வைக்க வேண்டும்.
இந்த சீசனின் நட்சத்திர இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்துக்கு பலமாக இருக்கிறது.
பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என்று மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் பணியில் ஆக்சன் அமளி துமளி படுகிறது.
அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது வசனங்கள் நேர்த்தியாக இருந்தாலும் ஆளாளுக்கு கோயம்புத்தூர், மதுரை ஸ்லாங்கில் வசனம் பேசிக்கொண்டு இருப்பது படத்தின் முக்கியமான குறை.
எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தி, கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்களின் பட்டியலில் சேர்கிறார். படத்தின் செய் நேரத்தில் ஆக கவனம் செலுத்தி இருப்பவர் படத்தின் பாத்திரங்கள் பேசும் வசன உச்சரிப்பில் அந்த பகுதியின் வட்டார மொழி காக்க ஒரு பயிற்சி பட்டற நடத்தி இருக்க வேண்டும்.
அது பெரும் குறையாக இருக்கிறது.
மற்றபடி ஆகப்பெரிய முயற்சியில் மண்டாடியை கொண்டாடலாம்..!
– வேணுஜி