April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்
December 6, 2018

இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்

By 0 904 Views

‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ்.

இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய ‘டைகர் ஜிந்தா’ அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகிய ‘ரேஸ் 3’ மற்றும் விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் அவர் இத்தனை கோடியைச் சம்பாதித்துள்ளாராம்.

அவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி ரூ.228.09 கோடி சம்பாத்தியத்துடன் இரண்டாவது இடத்திலும், அக்‌ஷய் குமார் ரூ.185 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

தொடர்ந்து முதல் பத்து இடங்களில் இருப்பவர்கள்…
நடிகை தீபிகா படுகோனே ரூ.112.8 கோடி – 4-வது இடம்
தோணி ரூ.101.77 கோடி – 5-வது இடம்
அமீர் கான் ரூ.97.5 கோடி – 6-வது இடம்
அமித்தாப் பச்சன் ரூ.96.17 – 7-வது இடம்
ரன்வீர் சிங் ரூ.86.67 கோடி – 8-வது இடம்
சச்சின் டெண்டுல்கர் ரூ.80 கோடி – 9-வது இடம்
அஜய் தேவ்கன் ரூ.75.5 கோடி – 10-வது இடம்

இந்த வரிசையில் ரஜினிகாந்த் ரூ.50 கோடியுடன் 14-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.66.75 கோடியுடன் 11-வது இடத்தில் இருக்கிறார்.

விஜய் ரூ.30.33 கோடியுடன் 26-வது இடத்திலும், விக்ரம் ரூ.26 கோடியுடன் 29-வது இடத்திலும் சூர்யா, விஜய் சேதுபதி இருவரும் ரூ.23.67 கோடியுடன் 34-வது இடத்தில் இருக்கிறார்களாம்.

இந்த வரிசையில் கமல் ரூ.14.2 கோடியுடன் இருப்பது 71-வது இடத்தில் அவரை தனுஷும், நயன் தாராவும் ஓவர்டேக் செய்து முறையே 53, 69 இடத்தில் இருக்கிறார்களாம்.

ஹும்..!