December 12, 2019
  • December 12, 2019
Breaking News
  • Home
  • vijay sethupathi

Tag Archives

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

by on November 21, 2019 0

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.  120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.    சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் […]

Read More

விஜய் சேதுபதி பேட்டியும் ஒரு பிரச்சினை – சங்கத்தமிழன் போராட்ட வெளியீடு

by on November 16, 2019 0

நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி… அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த […]

Read More

விட்டுப்போன விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

by on November 15, 2019 0

தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சில கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் விஜய்சேதுபதி, யுகபாரதி உள்ளிட்ட நால்வர் அடக்கம். அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலைமாமணி விருதினை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, “கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கும் இயல் இசை நாடக மன்றத்துக்கும் மிக்க நன்றி…” என்றார். 

Read More

அறிவித்தபடி விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை

by on November 5, 2019 0

‘மாண்டி’ என்ற ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்சேதுபதியைக் கண்டித்து பல அறிக்கைகள் வந்தன. அதில் அடுத்தகட்டமாக வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் அவரது அலுலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.  அதன்படி இன்று (05-11-2019) காலை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை இது குறித்து விஜய் சேதுபதியோ, அவர் விளம்பரம் செய்த மாண்டி நிறுவனமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதாவது […]

Read More

விஜய் சேதுபதி 41 வயதை ஒட்டி 41000 பனை விதை நடவு

by on November 3, 2019 0

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.   சமீபத்தில் கூட ஒரு ஏழை விவசாயிக்கு அவர் நிலத்தில் நடவு செய்ய உதவினார்கள்.   அப்படி விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டும், விஜய் சேதுபதியின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டியும் நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி […]

Read More

விஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி

by on November 2, 2019 0

நடிக்க ஆசையில்லாத இயக்குநர்களை ஹாலிவுட்டில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. நம்மூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்களும் நடிக்கும் ஆவலில்தான் இருக்கிறார்கள். ஓடுகிற வரை இயக்கம்… அதுக்குப்பிறகு நடிப்பு என்று செட்டில் ஆகி விடுகிறார்கள். கோலிவுட்டில் நான்கு படங்கள் இயக்கிய ‘மகிழ் திருமேனி’க்கு இப்போது நடிப்பு திசை ஆரம்பித்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனான இந்தி இயக்குநர் ‘அனுராக் காஷ்யப்’புக்கு மகிழ் டப்பிங் பேசியிருந்தது அந்தப் பாத்திரத்தை மேம்படுத்தியது. வில்லனுக்கு டப்பிங் என்பது தாண்டி இப்போது வில்லனாகவே ஆகிறார் மகிழ் […]

Read More

விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு

by on October 31, 2019 0

இன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது. தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்திலிருந்து அவர் விலகினார். ஆனால், சமீபத்தில் அவர் […]

Read More

மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்

by on October 24, 2019 0

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகும் ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-   ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,   “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை […]

Read More

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் வெளியீடு அறிவிப்பு

by on October 21, 2019 0

பார்க்கப் போனால் தீபாவளிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய்சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் தீபாவளி வெளியீட்டில் ‘சங்கத் தமிழன்’ பெயர் இருந்தது. ஆனால், இரண்டு பெரிய படங்களான விஜய்யின் பிகிலும், கார்த்தியின் கைதியும் வெளியாவதால் இருவருக்கும் வழிவிட்டு ‘சங்கத் தமிழன்’ பின்வாங்கியது. இந்நிலையில் இப்போது நவம்பர் 15-ம் தேதி படம் வெளியாகுமென்று படத்தை வெளியிடும் ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ அறிவித்துள்ளது. இந்தத் தேதியாவது மாறாமல் படம் வெளியாக […]

Read More