April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

Amazon Prime -ல் இந்தியில் வெளியாகும் சூர்யாவின் சூரரை போற்று

by on April 1, 2021 0

சூர்யா நடித்து OTT தளத்தில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”. நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது. இயக்குநர் சுதா […]

Read More

கங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை

by on March 20, 2021 0

தீ விபத்தினால் பாதிக்கபட்டவர்களுக்காக இலவச சிகிச்சை வழங்கிடும் ‘Hope After Fire Scheme’ திட்டம் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது. 2012-ஆம் ஆண்டு அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சூர்யா , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற, தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியை சந்தித்தார். அம்மாணவி மேற்கொண்டு படிக்க விரும்பினார். உடல்நிலை சீரானதும் படிக்கலாம் என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதன் பிறகான 2 ஆண்டுகள் உடல் முழுவதுமான […]

Read More

மகனுக்கு சுத்தத் தமிழ்ப் பெயர் வைத்த கார்த்தி

by on March 17, 2021 0

சிவகுமாரின் மகன்களான சூர்யா கார்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகளுக்கு தியா, தேவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறக்க அதற்கு சுத்த தமிழில் உமையாள் என்று பெயர் வைத்தனர். அதற்கு பின் நான்கு மாதங்களுக்கு முன் ரஞ்சனி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் […]

Read More

சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை

by on February 7, 2021 0

கொஞ்ச நாள் முன்பு நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் வெகு விரைவிலேயே அந்த செய்தி நம்பகத்தன்மை அற்றது என்பது உறுதியானது. ஆனால், சற்று நேரத்துக்கு முன்பு அவரது மகனும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் டிவீட் கோலிவுட்டில் மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ட்விட்டில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து குணம் அடைந்து இருப்பதாக […]

Read More

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பு

by on January 26, 2021 0

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் […]

Read More

கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் போட்டியிடும் சூரரைப் போற்று

by on December 20, 2020 0

சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது. இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த […]

Read More

அருண் விஜய்யின் மகனை தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தும் நடிகர் சூர்யா

by on December 14, 2020 0

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K […]

Read More

சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்

by on November 12, 2020 0

‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே’ என்பார்கள். ஆனால் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு தான் மட்டுமல்ல, தன்னைப்போன்ற எல்லா சாமானியர்களையும் பறக்க வைத்த ஒரு எளிய மனிதனின் சாதனைப் போராட்டம்தான் இந்தப்படம். ஆகாயத்தில் பறக்கும் மனித முயற்சியில் விமானக் கண்டுபிடிப்பு காலம் காலமாகக் கைக்கொள்ளப்பட்டு அத்தனை முயற்சிகளும் wrong ஆகப் போன நிலையில் அதை Right என்று ஆக்கியது ரைட் சகோதரர்களின் முயற்சி. ஆனாலும் கூட அந்த சாதனைப் பயணத்தை ஆதிக்க சக்திகள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு […]

Read More

சூரரைப் போற்று பார்க்க இன்னும் சில மணி நேரங்களே…

by on November 10, 2020 0

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள் இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் […]

Read More