March 25, 2025
  • March 25, 2025
Breaking News
December 7, 2018

பவர் ஸ்டாரை காணவில்லை… பரவும் தகவல்

By 0 903 Views

நடிகனாக ஆகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கோலிவுட்டில் புகுந்து, நினைத்தது போலவே ஷங்கர் படம் வரை நடித்துப் புகழ் பெற்றவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.

டாக்டர் தொழில் உள்பட பல தொழில்கள் செய்துவந்த அவர் மீது சீட்டிங் வழக்குகள் பாய்ந்து சிறை சென்றவர்… அதிலும் திகார் வரை சென்று புகழ் (!) பெற்றவர்.

இந்நிலையில் அவரைக் காணவில்லை என்று அவர் மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறாராம். அதில் நண்பரைக் காணச் சென்ற அவரைக் காணவில்லை என்று குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்.

இது உண்மையா அல்லது நடிகர் சரவணனின் பன்றிக் காய்ச்சல் போலான தகவலா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை..!