March 1, 2021
  • March 1, 2021
Breaking News

Tag Archives

எங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்

by on January 10, 2021 0

தேர்தலுக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டங்களை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் வகுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஐந்தாம்கட்டமாக கோவையில் நடைபெறும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: “நமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் சொல்கிரார்கள். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை […]

Read More

கமல்ஹாசன் அரசியலில் ஜீரோ – எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

by on December 28, 2020 0

தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கினார் அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான […]

Read More

எம்ஜிஆரிடம் கேட்காததை என்னிடம் கேட்கிறீர்களே – கமல்

by on November 5, 2020 0

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் அளித்த பேட்டி சாரம்சம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே? ”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ”நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த […]

Read More

42 வருடங்களுக்கு பின் பிரச்சனைக்குள்ளான அவள் அப்படித்தான் படத்தலைப்பு

by on October 5, 2020 0

சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரிலே காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. சிலுக்கு மாதிரியான நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். நடிகையை தயாராகாத நிலையில் டைட்டிலை பட்டம் எப்படி பிடித்தார்கள் என்பது ஒரு […]

Read More

எஸ்பிபி நலம்பெற ரஜினி கமல் பாரதிராஜா இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு

by on August 19, 2020 0

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இந்த கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி-கமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 20 8 2020 மாலை 6 மணியில் இருந்து 6.05 வரை நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய எந்த […]

Read More

மக்களுக்கான நீதி இன்று உறுதியானது – ஸ்டெர்லைட் தீர்ப்பு பற்றி கமல்

by on August 18, 2020 0

மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள். இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, […]

Read More

நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி

by on July 9, 2020 0

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறாராம். அத்துடன் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறாராம். இந்த சூழ்நி லையில் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை யும் கமல்  ஏற்றுக்கொண்டுள்ளாராம். கமல் அரவணைப்பில் பொன்னம்பலம் பூரண குணமடைந்து திரும்பட்டும். வீடியோ கீழே…

Read More

பிக்பாஸ் 4 மீண்டும் கமல் – தேர்வுப் பட்டியலில் ரம்யா பாண்டியன்

by on April 21, 2020 0

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை […]

Read More