தமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’.
S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’ நாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் பல குறும்ப்டங்களில் நாயகியாக நடித்த ‘ரிஷ்மா’ நாயகியாக நடித்துள்ளார்.
கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, எஃப்.எஸ்.பைசல் இசையமைக்க ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னணி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜுலை 9ஆம் தேதி தொடங்கி 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.பெரும்பாலும் சென்னையிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உருவாகவுள்ள படத்தில் மருத்துவம் தொடர்பான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனராம். பாடல்கள் குளுகுளுவென்று ஊட்டியில் உருவாகவுள்ளது.
இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அஜித் நடிச்சா ‘அசல்’, புதுமுகம் நடிச்சா ‘நகலா..?’