September 16, 2026
  • September 16, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் திரைப்பட விமர்சனம்

by by Aug 23, 2026 0

’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த இளன், இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் – இயக்கமும் அவர்தான்.

இளனுக்கும் சான்வி மேக்னாவுக்கும் திருமணம் நடக்கவிருக்க, திருமண மேடையில் இருந்து சான்வி மேக்னா தெரித்து ஓடுவதில் இருந்து படம் தொடங்குகிறது. என்ன நடந்ததாம்?

ஒரு எக்குத்தப்பான சந்திப்பின் மூலம் சான்வி மேக்னாவை காதலிக்க ஆரம்பிக்கும் இளன், அந்தக் காதலும் கைகூட, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெறுகிறது. 

ஆனால் அங்கிருந்து சான்வி ஓடும்…

Read More

இருமுடி கட்டு திரைப்பட விமர்சனம்

by by Aug 22, 2026 0

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது முழுக்க ஒரு பக்திப்படம் என்று நினைக்க வேண்டியதில்லை. ஆனால், பக்தியும் படத்தின் ஒரு அங்கம்.

வாழைத் தார் அறுக்கும் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு  திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சபரி மலைக்கு மாலை போட்டு  குழந்தை பிறக்க, மணிகண்டன் என்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்க்கிறார்.

மகளுக்கு ஒன்று என்றால் கொதித்தெழும் ரவிதேஜா, ஒரு வருடம் ஐயப்பனுக்கு மாலை போட்ட வேளையில் மகள்…

Read More

ஒன் மேன் திரைப்பட விமர்சனம்

by by Aug 20, 2026 0

ஒரு புதுமுக இயக்குனராக, தயாரிப்பாளராக வெங்காயம் படத்தில் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சங்ககிரி ராஜ்குமார் அந்தப் படம் எடுத்த அனுபவங்களையே இன்னொரு படமாக்கி பயாஸ்கோப் என்ற பெயரில் கொடுத்தார். 

இப்போது இந்தப் புதுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இன்னொரு புதுமையை இந்த ஒன் மேன் படத்தில் செய்து சாதனை படைத்திருக்கிறார். 

ஒரு படம் உருவாக எத்தனை தொழில்நுட்ப, மற்றும் படைப்பு, நடிப்புக் கலைஞர்கள் தேவையோ அவை எல்லாவற்றையும் தனி ஒரு மனிதனாக நின்று அந்தந்த…

Read More

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by by Aug 15, 2026 0

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத்.

அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது.

உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

சொந்த.வாழ்வில் அம்மாவுக்கு அப்பாவால் நேர்ந்த இழப்பின் காரணமாக கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் கோடீஸ்வரத் தொழிலதிபர்…

Read More

வதந்தி சீசன் 2 – வெப் தொடர் விமர்சனம்

by by Aug 8, 2026 0

வழக்கமாக தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாக கொண்டு வரும் கதை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது சசிகுமாரை தான். அதிலும் பல்லாண்டு பிடித்த ஒரு அடாவடி கேரக்டரில் தான் அவர் நினைவுக்கு வருவார். 

அதை மாற்றி அவரை மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளராக காண்பிக்க நினைத்ததற்கு இந்த தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசை பாராட்டியாக வேண்டும்.

அப்படி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, அது அரசு நிகழ்ச்சிக்கான…

Read More

போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2026 0

இந்த மண்ணுக்கு மரங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்வதுதான் படத்தின் மையக்கரு. ‘இந்த பூமியின் கடைசி மரமும் விழுந்து விட்டால் ஒரு உயிர் கூட இங்கே மிஞ்சாது…’ என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல வந்த இயக்குனர் அஷ்ரப், அதைத் தானே எழுதி நடித்து ‘விஷுவல் ட்ரீட்’டாக சொல்லி இருக்கிறார்.

அப்படி இருக்கும் மரங்களுக்கு எல்லாம் ஆதிமரமான தாய் மரம் ஒன்று இருப்பதாக தன் தாய் சொன்னதை நம்பும் மகனான நாயகன் அஷ்ரப், அந்த அரிய மரத்தைப் புகைப்படம்…

Read More

டிசி (DC) திரைப்பட விமர்சனம் (3.5/5)

by by Aug 7, 2026 0

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் உரிமை போலீசுக்கு இருக்கிறது. ஆனால் அந்த போலீசே தவறு செய்தால் அவர்களை யார் தட்டிக்கேட்பது..?

அப்படித் தட்டிக் கேட்ட சாமானியன் நாயகன் லோகேஷ் கனகராஜ் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். அது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது. 

ஆனது ஆயிற்று, போலீஸ் துரத்தும் குற்றவாளியாக மாறிய பின் வேறு என்ன செய்வது என்று தனக்கு நியாயமானவை என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதற்காக எந்த எல்லைக்கும் சென்று அதைச் செய்து வருகிறார் லோகேஷ். அதில் பல வன்முறைச்…

Read More

ஜனநாயகன் திரைப்பட விமர்சனம்

by by Jul 24, 2026 0

தமிழக முதல்வரான பின் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படமும், நடிகராக அவரது நடிப்பில் அமைந்த கடைசி படமும் இதுவாக இருக்க மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம்.

கதை இதுதான்…

ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார் விஜய். அவரது திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஜெயிலர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவியால் இறக்கும் தருவாயில் உள்ள அம்மாவை சந்திப்பதற்காக வெளியே வருகிறார்.

சட்டத்தை மீறி தன்னை வெளியே அனுப்பிய கௌதம் வாசுதேவன் மேனன் மேல் மரியாதை…

Read More

அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2026 0

சென்னையை மையமாக வைத்து படங்கள் வருவது மிகவும் குறைவு. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வடசென்னையை சுற்றியே அமைகிறது.

சென்னை நகருக்குள் இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய பதிவு தமிழ் திரைப்படங்களில் குறைவாகவே இருக்கிறது அந்த குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் படம் தான் இது. 

சென்னை பெரம்பூரில் வசிப்பவர்களுக்கு அங்கு வாழ்பவர்கள் பற்றி நன்றாக தெரியும் முக்கியமாக நடுத்தர வர்க்கத்து ஆங்கிலோ இந்தியர்கள் பெரம்பூரில்தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். 

அப்படி அங்கு வசிக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப்…

Read More

இதயம் முரளி திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2026 0

முரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு  தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எதிலும் வெற்றி பெறாமல் போனதால் வேறு வழியின்றி தன் மாமா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

பிற காதல்கள்…

Read More