தமிழக முதல்வரான பின் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படமும், நடிகராக அவரது நடிப்பில் அமைந்த கடைசி படமும் இதுவாக இருக்க மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் படம்.
கதை இதுதான்…
ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கிறார் விஜய். அவரது திறமையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஜெயிலர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவியால் இறக்கும் தருவாயில் உள்ள அம்மாவை சந்திப்பதற்காக வெளியே வருகிறார்.
சட்டத்தை மீறி தன்னை வெளியே அனுப்பிய கௌதம் வாசுதேவன் மேனன் மேல் மரியாதை கொண்ட விஜய், அவரது மகள் மீதும் அன்பு காட்டுகிறார். இந்நிலையில் விபத்தில் கெளதம் மேனன் இறந்து போக, அவர் மகளான நமீதா பைஜூவை தன் மகளாக நினைத்து விஜய் வளர்க்கிறார்.
மவிதா பைஜுவின் வாழ்க்கை கனவை நிறைவேற்ற விஜய் சபதம் கொள்ளும் நிலையில் மமிதா பைஜூக்கு ஒரு பிரச்சனை வருகிறது.
அதே நேரத்தில் யாரை கொலை செய்ததற்காக சிறைக்கு சென்றாரோ அந்த பாபி தியோல் உயிருடன் இருப்பதும், அவர்தான் மமிதா பைஜூவின் பிரச்சனைக்கு காரணம் என்பதையும் விஜய் அறிந்து கொள்கிறார்.
இவர்கள் இருவருக்குமான பிளாஷ் பேக் என்ன? இறந்த பாபி தியோல் எப்படி மீண்டும் வந்தார்? இரண்டு பேரின் பிரச்சினைகளும் தீர்ந்தன ? என்பதை அதிரிபுதிரியாக சொல்வதுதான் மீதிப்படம்.
மமீதா வைஜு விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் ஏன் என்று கேட்டிருக்க முடியாது ஆனால் அவரை மகள் போல் பாவித்து அடித்திருப்பதில் விஜயன் பெருந்தன்மை புரிகிறது. அத்துடன் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் எதுவாகவும் கமர்சியல் குறையாமல் நடித்து அதகளப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் தேர்தலுக்கு முன்னரே வெளியாக இருந்த படம் என்பதால் அரசியல் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த பஞ்ச் வசனங்களில் திரையரங்கே அதிர்கிறது.
நாயகியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு டூயட்டோ, காதல் கட்சிகளோ இல்லை. ஆனாலும் கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் முழு வில்லனாக ஆகி விடக்கூடாது என்பதால் நேர்மையான அதிகாரியாக இருந்து வில்லனாக உருவெடுப்பதாக பிளாஷ் பேக் வைத்து அவரைக் காப்பாற்றி இருக்கிறார் இயக்குனர். அவரது நடிப்பு பொருத்தமாக இருக்கிறது.
விஜய் சித்தப்பாவாக நினைத்து அவரை சித்தா என்று விஜயை செல்லமாக அழைப்பதும், அவரிடம் இருந்து விலக நினைக்கும்போது இறுக்கமாக நடிப்பதுமாக நடிப்பில் கவனம் பதிக்கிறார்.
இவர்களுடன் ஜெயிலராக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அரசியல்வாதியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கலெக்டராக நடித்திருக்கும் பிரியாமணி, விஞ்ஞானியாக நடித்திருக்கும் நரேன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி, தொழிலதிபராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட அனைவரும் இது ஒரு பெரிய படம் என்று உணர வைத்திருக்கிறார்கள்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவும் அந்த பிரம்மாண்டத்தை உறுதி செய்து இருக்கிறது. அவரது ஒளிப்பதிவை மிஞ்சி நிற்கின்றன சிஜி காட்சிகள்.
“தளபதி கச்சேரி…” பாடலில் விஜய் ரசிகர்களுக்கான தன் சிக்னேச்சரை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மற்ற பாடல்களும், பின்னணி இசையும் கூட கலக்கல் ரகம்தான்..
தோழி வீட்டில் இருந்து கதையை வாங்கி இயக்கியிருந்தாலும் எச்.வினோத், இரண்டாம் பாதியில் விஜயின் ரசிகர்களுக்காக கதையை மாற்றி மெனக்கெட்டு இருக்கிறார்.
ஆனாலும் இது முழுக்க முழுக்க விஜய் படமாக இருக்கிறதே அன்றி எச்.வினோத்தின் படமாக இல்லை என்பது அவர் மீதான நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இல்லை.
முதல் பாதி வரை பரபரப்பாக நகரும படம் இரண்டாவது பாதியில் கமர்சியல் அம்சங்கள் என்ற பெயரில் சற்று நீண்டு கொண்டிருக்கிறது.
இருந்தாலும் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிதும் கை கடுக்கும் விதமாக அமைந்திருப்பதும், அவரது நடிப்பில் அமைந்த கடைசி படம் என்பதும் இந்தப் படத்தில் பலமாக அமைகிறது.
ஜன நாயகன் – கனம் பொருந்தியவன்..!
– வேணுஜி