September 15, 2026
  • September 15, 2026
Breaking News
  • Home
  • அரசியல்
  • முதல்வர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்..! – நயினார் நாகேந்திரன் கண்டனம்
September 15, 2026

முதல்வர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்..! – நயினார் நாகேந்திரன் கண்டனம்

By 0 5 Views

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சிலையைத் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தைத் தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் கட்சியினரை விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காப்பதே இத்தகைய எல்லை மீறல்களுக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார்.

எனவே மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இறை உருவங்களைச் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.