September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • அரசியல்
  • அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்
March 25, 2026

அரசியலில் முற்றுப்புள்ளி என்பது கிடையாது – கமல்ஹாசன்

By 0 173 Views

பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாகும். பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

தமிழகத்தை மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து காக்கும் எண்ணத்தில், தமிழக மக்களின் வளர்ச்சி கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது.

எந்த சுயநலமின்றி, என்னைப் புரிந்துகொண்டு, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.