November 29, 2021
  • November 29, 2021
Breaking News

Tag Archives

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் – விஷால் நம்பிக்கை

by on August 29, 2021 0

இன்று தனது 44வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால், ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார்.  […]

Read More

கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்

by on April 13, 2021 0

உலகமெங்கும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கண்டிருக்கும் கர்ணன் படத்தை நடிகரும் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து அந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் படத்தில் இடம்பெற்றுள்ள உண்மை சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் படத்தில் திமுக ஆட்சி நடப்பதை போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டேன். அவர்களும் இரு […]

Read More

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்

by on March 12, 2021 0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன் ஒரத்தநாடு-ராமச்சந்திரன் தஞ்சை-நீலமேகம் திருச்சி மேற்கு-கே.என்.நேரு காட்பாடி- துரைமுருகன் காஞ்சிபுரம்-எழிலரசன் உத்திரமேரூர்-சுந்தர் செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் செஞ்சி -மஸ்தான் விக்கிரவாண்டி-புகழேந்தி திருக்கோவிலூர்- பொன்முடி திருவண்ணாமலை-எ.வ.வேலு எடப்பாடி- சம்பத்குமார் பாலக்கோடு-பி.கே.முருகன் […]

Read More

தலைவரை உலுக்கி எடுத்த அன்பு அண்ணனின் மரணம் – உதயநிதி உருக்கம்

by on June 11, 2020 0

 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு; ”எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர். எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் […]

Read More

வாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்

by on November 3, 2019 0

புதுக்கோட்டை, விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… 1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்ட முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது. சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், […]

Read More

திமுக தகுதி நீக்கம் செய்வதைவிட நானே விலகுகிறேன் – ராதாரவி

by on March 25, 2019 0

‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நடிகர் […]

Read More

நான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்

by on January 9, 2019 0

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்றைக்கு திருவாரூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இன்றைக்கு சந்தித்த கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். […]

Read More

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

by on August 26, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது. இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, […]

Read More

ஸ்ரீரங்கம் சென்றால் மட்டும் சிஎம் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

by on June 27, 2018 0

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்வுக்கு ஸ்ரீ ரங்கம் சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிற கட்சிப் பிரமுகர்களும், வலை தளங்களிலும் பலவாறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஸ்டாலின் கோவிலுக்குச் செல்லவில்லை எனவும், அவர்களாக முன்வந்து அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார் எனவும் திமுக தரப்பில் சொல்லப்படும் நிலையில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் மு.க.ஸ்டாலின் […]

Read More

மிக விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – முக ஸ்டாலின்

by on June 17, 2018 0

நேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… “கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தைத தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில்… கடல் கடந்து எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் […]

Read More