April 20, 2024
  • April 20, 2024
Breaking News
January 9, 2019

நான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்

By 0 979 Views
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்றைக்கு திருவாரூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இன்றைக்கு சந்தித்த கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி.
 
மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள்.எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
 
தேர்தல் சமயத்தின் போது அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்க வருவார்கள். யாரை தேர்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் தான் சரியாக முடிவெடுக்க வேண்டும். முன்னதாக குடவோலை முறை மூலமாக தான் கிராம சபை கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பர். அதேபோன்று இன்றும் கிராம சபை தான் மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் காட்டுகிறது.
 
தஞ்சாவூர் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் பள்ளிப்பாக்கம்கிராமசபை கூட்டம் மற்றும் குடவோலை முறை நடந்ததற்கான கல்வெட்டு இருக்கிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், கலைஞர் பிறந்த தஞ்சை மாவட்டம் ஆகிய இரண்டிலும் கல்வெட்டு உள்ளது.
 
கலைஞர் இல்லை என்பதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. கலைஞர் உங்கள் ஒவ்வொருவரிடமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
 
சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் வரலாம். இதற்கிடையேஇடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே சரியான மக்கள் பிரதிநிதியை தேர்தெடுக்க வேண்டியது உங்கள் கடமை..!”  என்றார்.