June 20, 2024
  • June 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்
January 14, 2024

சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்

By 0 110 Views

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.

எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன்  படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலில் ஆர்.ஜே. பாலாஜியின் மூன்றாவது படம் இது. ஆனால் முந்தைய படங்களைப் போல் ஆர்.ஜே .பாலாஜியே இந்தப் படத்தை இயக்கவில்லை.

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நாயகன் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குனர் கோகுல் பேசினார்கள்.

இயக்குனர் கோகுல் பேசுகையில், “இந்தத் திரைப்படம் காமெடி, எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கி இருக்கிறது. நாம் எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போய் விட்டு முடி எல்லாம் வெட்டிய பிறகு கண்ணாடியில் பார்க்கும்போது ஒரு சந்தோஷம் வருமோ அது மாதிரி இந்த திரைப்படத்தைப் பார்த்து முடித்ததற்கு பிறகு உங்களுக்கு நிச்சயமாக தோன்றும். என்னுடைய நகைச்சுவை பாணி இந்த படத்திலும் இருக்கிறது. அது இல்லாமல் வித்தியாசமாகவும் முயற்சி செய்திருக்கிறோம்.

நான் என் வாழ்க்கையில் பார்த்த முடி திருத்துபவர்கள்தான் இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன். இன்றைக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவர்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காகதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இன்னைக்கு இந்த தொழில் ஒரு மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறது. இந்த உள் கருத்த மையமாக வைத்து, நிறைய விஷயங்களை நாங்கள் இந்தத் திரைப்படத்தில் பேசி இருக்கிறோம். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும்  பிடிக்கும்..!” என்றார்.

”இந்தப் படம் எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் மக்களுக்கு தேவையான கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும். லோகேஷ் கனகராஜ் , ஜீவா கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ், ஒரு பெரிய ஸ்டார் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதை யாரென்று இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆவீர்கள்.

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை உள்வாங்க எனக்கு கடினமாக இருந்தது. 

‘ரன் பேபி ரன்’ படத்தில் ஒரு சீரியசான ரோலை நடித்ததில் இருந்து எனக்கும் இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை வந்தது. அதன் விளைவாகத்தான் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டேன்.

இதில் வழக்கமான நகைச்சுவையுடன் சமூகக் கருத்துகளை மேலோட்டமாக சொல்லி இருக்கிறோம். அரசியல் பேசாத இந்த படம் , மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றார் பாலாஜி.

 

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசுகையில், ” சிங்கப்பூர் சலூன் இதுவரை நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிக பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம். ஆர். ஜே. பாலாஜியால் இப்படியும் நடிக்க முடியுமா என்று மக்கள் வியப்பது மாதிரியான ஒரு கதை.

அவரும் அதற்கு ஏற்ற மாதிரி நடித்திருக்கிறார், எனக்கு இந்தக் கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் என்று  சுவாரசியங்களை இந்தத் திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்..!

இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு ரெட் ஜெயன்ட்டில் திரையிட்டுப் பார்த்தார்கள். பார்த்த பிறகு “நாங்களே இந்த படத்தை வெளியிடுகிறோம்…” என்று சொன்னது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

மீண்டும் அங்கிருந்து ஒரு போன் கால் வந்தது அதில் சேட்டிலைட்டுக்கும் கலைஞர் டிவியே எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். இதுவே இந்தப் படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது..!” என்றார்.