April 15, 2026
  • April 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!
April 15, 2026

பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!

By 0 13 Views

விஜய் டிவிக்கு வருகிறார் ‘தாய்மாமன்..!’

அண்ணன், தங்கைப் பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர், ‘தாய்மாமன்’ விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

’கிழக்குச் சீமையிலே’ போன்ற உணர்வுகளை அள்ளி வீசுகின்ற படங்களைப் பார்க்காத ஜென் ஸீக்களுக்கும், அதைப் பார்த்தும் மறக்க முடியாத 90ஸ் கிட்ஸ்களுக்கும் அசத்தலான ஒரு காவியமாக மலரப் போகிறது, ‘தாய்மாமன்.’

இந்தத் தொடரின் ப்ரோமோவே பெரிய தாக்கத்தைத் தந்துவிட்டது. இதில் மாமன் சீர் கொண்டு வரும் காட்சி பார்ப்பவர்களை சென்டிமெண்டில் ஆழ்த்திவிட்டது.

இந்தப் புதிய தொடரின் நாயகனாக, நாகராஜ் நடிக்கிறார். நாயகியாக ஷாலினி மிளிர்கிறார். நாயகனின் தாயாக சீமா நாயரும், தந்தையாக ரஞ்சித்தும் நடித்திருக்கிறார்கள். நாயகியின் தாயாக தேவிப்ரியாவும், தந்தையாக ராஜ் கபூரும் நடித்திருக்கிறார்கள்.

பெரிய நட்சத்திரப் பட்டாளம், ‘தாய்மாமன்’ தொடரை தவறவிட முடியாத ஒரு அம்சமாக மாற்றுகிறது.

பாசம், கடமை, முரண்பாடு, முறுக்கல், உணர்வு, உள்ளம் என்று அனைத்து அம்சங்களையும் சேர்த்துத் தரும், ‘தாய்மாமன்’ தொடர் விஜய் டிவியின் தொடர் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தத் தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டார் விஜய் சேனலுடன் பல ஆண்டுகளாக இணைந்து பணிபுரிந்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ பல தரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவிக்காகத் தயாரித்து வழங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியை புத்தம் புதிய வடிவில் அளித்து விஜய் டிவிக்கு புகழ் சேர்த்தது பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ.

ஸ்டார் விஜய் சேனலின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோதான் தயாரித்து வழங்கியது.

திரைப்படத் துறையிலும் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ கால் பதித்திருக்கிறது. நடிகர் யோகி பாபு நடித்த ‘கிணத்தக் காணோம்’ படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்தது

’தாய்மாமன்’ தொடர் குடும்பத்தின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெறும் என்பது நிச்சயம். குடும்பத்தினருக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

———–