November 29, 2021
  • November 29, 2021
Breaking News
  • Home
  • Makkal Needhi Maiam

Tag Archives

அரசியலுக்கு வந்ததால் 300 கோடியை இழந்தேன் – கமல்ஹாசன்

by on March 23, 2021 0

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் […]

Read More

கமல் போட்டியிடும் கோவை தெற்கு – தொகுதி குறித்த அலசல்

by on March 12, 2021 0

கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி. மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது. நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் பகுதிகள் இந்த தொகுதியில்தான் வருகின்றன. இந்த தொகுதியில் அனைத்து விதமான தொழில்களும் நடக்கின்றன. குறிப்பாக ஜவுளி, நகை கடைகள், வணிக […]

Read More

எம்ஜிஆரிடம் கேட்காததை என்னிடம் கேட்கிறீர்களே – கமல்

by on November 5, 2020 0

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் அளித்த பேட்டி சாரம்சம்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்சி, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே? ”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்”, ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்று பாடினார் எம்ஜிஆர். அவரைக் கேட்காமல் என்னைக் கேட்கிறீர்களே. கட்சியின் தேர்தல் திட்டத்தை, ”நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்” என்று பாடினார் எம்ஜிஆர். அது அவர் சொந்தப் படமல்ல. நாகிரெட்டியார் எடுத்த படம். அதேபோன்று எந்த […]

Read More

மக்களுக்கான நீதி இன்று உறுதியானது – ஸ்டெர்லைட் தீர்ப்பு பற்றி கமல்

by on August 18, 2020 0

மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டுமென நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள். இந்த தீர்ப்பு கொண்டாடக்கூடிய ஒன்று என்றாலும், இன்னும் அந்தப் போர் முடிந்து விடவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு, […]

Read More

கோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

by on July 10, 2020 0

சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் காய்கறி, பூ, பழங்களின் தேவைகளை மட்டுமின்றி பல்வேறு அண்டை மாவட்ட மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த கோயம்பேடு காய்கனி மற்றும் மலர் அங்காடிகள் கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டு, பழங்கள், மலர் அங்காடிகள் மாதவரத்திற்கும், காய்கறி கடைகள் திருமழிசைக்கும் மாற்றப்பட்டு சுமார் 70நாட்களை தொடவிருக்கிறது. சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் கோயம்பேட்டில் அமைந்திருந்த காய்கறி மற்றும் பழங்கள், மலர் அங்காடிகளை மூலைக்கு ஒன்றாக பிரித்ததிலும், ஊரடங்கு அமுலில் […]

Read More

தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி – கமல் கடும் தாக்கு

by on May 14, 2020 0

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி தமிழக அரசு. டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது. மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த்துடன் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் விளைவாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை செய்துள்ளது தமிழக அரசு. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான […]

Read More

ஜூம் கால் மூலம் நிர்வாகிகள் ரசிகர்களிடம் பேசிய கமல்

by on April 8, 2020 0

இரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார். அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல். போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ […]

Read More

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by on April 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]

Read More