March 19, 2024
  • March 19, 2024
Breaking News
April 8, 2020

ஜூம் கால் மூலம் நிர்வாகிகள் ரசிகர்களிடம் பேசிய கமல்

By 0 638 Views

இரண்டு நாள் முன்பு மக்களின் குரலை வெளிப்படுத்தும் விதமாக மோடிக்கு சில பல கேள்விகளும், கோபங்களும் கொண்ட கடிதம் ஒன்றை எழுதிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் ஜூம் காலில் பேசி வருகிறார்.

அந்த வகையில் இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல்.

போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ காலில், “பயங்கரமான ரசிகர் சார் இவர். இவருக்கென்று TAB உள்ளது. அதை எப்போது ஓப்பன் பண்ணினாலும், உங்களைப் பற்றி மட்டும்தான் பார்ப்பார். முதலில் கிரிக்கெட், சீரியல் எல்லாம் பார்ப்பார்.

எப்போ நீங்கள் பிக் பாஸ் தொடங்கினீர்களோ, அப்போது முதல் உங்கள் ரசிகராக மாறிவிட்டார். அன்று முதல் எப்போதுமே TAB_ல் உங்களைப் பற்றித்தான் பார்க்கிறார். 24 மணிநேரமும் உங்கள் நினைப்பாகத்தான் இருக்கிறார். அவர் முதலில் வாக்காளர் அடையாள அட்டை ஏன் வாங்கினார் என்றால், டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்கத்தான்.

பெரிதாக எங்கேயும் வெளியே போக மாட்டார். முதல் முறையாக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தான் வாக்களிக்கவே சென்றார்” என்று பேசி இருக்கிரார்கள்.

அதைக் கேட்ட கமல் கையெடுத்துக் கும்பிட்டு “நன்றி, நன்றி போகன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதனைத் தொடர்ந்து கமலிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்று பேச முயல்கிறார். அத்துடன் அந்த வீடியோ பதிவு முடிவடைகிறது.

கமலிடம் போகன் என்ன கேள்வி எழுப்பினார், அதற்கு கமலின் பதில் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை.

கமலிடம் பேச வேண்டும் என்பது போகனின் ஆசை. அதை கமலிடம் தெரிவித்தவுடனே ஒப்புக்கொண்டு அவருடைய ஆசையை நிறைவேற்றியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் முழு வீடியோ ம நீ ம. சார்பில் ரிலீஸாகலாம்.

கீழே கமல் ஜூம் கால்…