July 1, 2022
  • July 1, 2022
Breaking News

Tag Archives

விக்ரம் திரைப்பட விமர்சனம்

by on June 3, 2022 0

கமல் படம், ரஜினி படம் என்றால் கமல் மற்றும் ரஜினிதான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அதை யார் இயக்குகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான்.  ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் இது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாகத்தான் தோன்றுகிறது. அதில் கமல் நடித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் கமல் படத்தின் குறியீடுகள் குறைந்தும் லோகேஷ் கனகராஜ் படங்களின் குறியீடுகள் அதிகரித்தும் இருப்பதுதான். அதென்ன லோகேஷ் கனகராஜ் பட குறியீடுகள் என்கிறீர்களா..? பிரியாணி, ஜெயில், கொசு மருந்து […]

Read More

அன்பு செழியன் மகள் சுஷ்மிதா – சரண் திருமணத்தில் கமல் ரஜினி நேரில் வாழ்த்து

by on February 21, 2022 0

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  மணமகள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA  இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, […]

Read More

கமலுக்கு கொரோனா உறுதி – பயன்படுத்திக் கொண்ட சி நே சி ம டீம்

by on November 22, 2021 0

இன்று பிற்பகலில் சென்னை கமலா திரையரங்கில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க இருந்தது. ஆடியோவை வெளியிட கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. விருந்தினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நேற்றிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு கொண்டிருக்க இன்று காலை திடீர் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் டீமிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக விருந்தினர்களுக்கும் […]

Read More

கமல் பாரதிராஜா இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கை

by on October 27, 2021 0

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.  இதுகுறித்து அவர் டுவிட்டரில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி […]

Read More

படுக்கை ஆக்சிஜன் தடுப்பூசி இல்லை ஆபத்துக்கு பிரதமரும் இல்லை – கமல்

by on April 21, 2021 0

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் […]

Read More

அரசியல் மிரட்டலில் எனக்கு பயம் இல்லை – கமல்

by on April 4, 2021 0

கோவையில் செய்தியாளர்களிடம் கமல் சொன்னது: ”தேர்தலை முன்னிட்டு ஊடகங்களை, குறிப்பாக எதிர்க்கட்சி ஊடகங்களைக்கூட நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தது. மாறாக இதில் எந்த சூழ்ச்சியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது எல்லோருக்குமான ஜனநாயகம் என்பதால், இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தை ஏற்கெனவே ஓரளவு சொல்லிவிட்டேன். வரலாறு என்னை இங்கே களத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என் வேலை உண்டு, எனது கலை உண்டு என்றிருந்தேன். எனது தேவை அரசியலுக்குத் தேவையா […]

Read More

அரசியலுக்கு வந்ததால் 300 கோடியை இழந்தேன் – கமல்ஹாசன்

by on March 23, 2021 0

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் […]

Read More