February 15, 2025
  • February 15, 2025
Breaking News
October 27, 2021

கமல் பாரதிராஜா இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கை

By 0 487 Views

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 

இதுகுறித்து அவர் டுவிட்டரில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.
 
கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்..!” என பதிவிட்டுள்ளார்.