June 15, 2026
  • June 15, 2026
Breaking News
October 29, 2021

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் திடீர் மரணம் – சோகத்தில் கர்நாடகா

By 0 678 Views

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் வருகிறார்.

இன்னும் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை பற்றிய தெளிவான விளக்கம் வராத நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

இன்று காலை 11.30க்கு உடற்பயிற்சியின் போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவர் வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

46 வயதில் அவர் உயிரிழந்தது இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல மொழி நட்சத்திரங்களும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாநிலமே சோகத்தில் மூழ்கியது.!