June 30, 2026
  • June 30, 2026
Breaking News
June 28, 2026

அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

“அங்கீகாரம்” என்பது வெறும் சமூகப் பிரச்சினையைப் பேசும் படமாக இல்லாமல், ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏங்கும் அங்கீகாரம் என்ற உணர்வை மையமாகக் கொண்டு நகரும் உணர்வுப்பூர்வமான படைப்பு.

கதையை சொல்லியிருக்கும் விதம்  கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது. தனிமனித போராட்டமாக மட்டுமில்லாமல் சமூக உறவுகள், சுயமரியாதை எல்லாம் கலந்த  திரைக்கதை, கதையாக சொல்லுவதற்கே பயன்பட்டுள்ளது.

கதை இப்படிப் போகிறது…

விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

ஆனால் ஏழ்மையான குடும்ப பெண் அணிக்கு வந்த அவருக்கு விளையாட்டு வீரருக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இருந்தபோதிலும், தேசிய அளவிலான போட்டியில் சாதனை புள்ளிகளோடு  காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார்.

ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு ஆதிக்க மனம் குண்டூர் பங்களிக்கும் தேசிய தடகளச் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா..?

அவர்கள் போடும் தடைகளை எல்லாம் மீறி சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கும் அவர் மாநில விளையாட்டுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் என்று முறையிட்ட அவரது முயற்சி எந்த பலனையும் அளிக்காமல் போகிறது.

எனவே நீதிமன்றத்திற்கு போகும் அவர் தனக்கான வழக்கறிஞர்கள் கூட மிக முக்கிய முடியாத நிலையில் தன் வழக்குக்காக தானே வாதிடுகிறார்.

அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதே இந்த படத்தின் கதை.

கையில் படம் தயாரிக்க பணம் இருக்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்களும் தானே நாயகனாக நடிக்க முடிவெடுப்பது புதிய விஷயம் இல்லை. 

ஆனால் கதாபாத்திரத்துக்காக ஒரு முழுமையான நடிகரின் அர்ப்பணிப்போடு தன்னுடைய உடல் தகுதியை விளையாட்டு வீரனுக்குரிய விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கும் முதல் தயாரிப்பாளர், இதில் நாயகனாக நடித்திருக்கும் கே.ஜெ.ஆர்தான் என்று அடித்துச் சொல்லலாம். 

நடிப்பிலும் அதே அர்ப்பணிப்பை மேற்கொண்டால் முன்னணி நடிகராக வலம் வர முடியும்.

அரசு வழக்கறிஞராக வரும் விஜி வெங்கடேஷ், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராகியிருக்கும் வசுந்தரா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின் தலைவராக நடித்திருக்கும் ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான், நீதிபதிகளாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் படத்தை கடத்திச் செல்ல உதவி இருக்கிறார்கள்.

முக்கியக் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகைப்படுத்தாமல், இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 

ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத், கதையின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கிறார். பின்னணி இசை காட்சிகளின் உணர்வை உயர்த்துவதோடு, தேவையான இடங்களில் மட்டுமே தனது இருப்பை உணர்த்துகிறது. எடிட்டிங் படத்தின் ஓட்டத்தை சீராகக் கொண்டு செல்கிறது.

இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் வணிகப் பொழுதுபோக்கு படமாக இல்லாவிட்டாலும், நல்ல கதைகளையும், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சினிமாவையும் விரும்புபவர்களுக்கு நிச்சயம் திருப்தி அளிக்கும்.

சில இடங்களில் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்ற சிறிய குறை இருந்தாலும், அது படத்தின் மொத்த தாக்கத்தை பெரிதாக பாதிக்கவில்லை.

“அங்கீகாரம்” மனிதனுக்கு மிகவும் தேவையானது பணமோ புகழோ அல்ல, அவனைப் புரிந்துகொண்டு வழங்கப்படும் ஒரு சிறிய அங்கீகாரம்தான் என்பதை மனதைத் தொடும் வகையில் பதிவு செய்யும் அர்த்தமுள்ள திரைப்படம்.