January 13, 2025
  • January 13, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

by by Dec 7, 2024 0

தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம். 

மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நடத்தப்படும் இதுபோன்ற டப்பாங்குத்து அழிந்து வரும் கலை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதைப் போன்ற கலை வடிவங்களை படமாக ஆக்கும்போது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட கலைஞர்கள்…

Read More

ஃபேமிலி படம் திரைப்படம் விமர்சனம்

by by Dec 7, 2024 0

‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம். 

மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ த்தனை பொருத்தமாக இருக்குமா என்றும் தெரியவில்லை.

மூத்த சகோதரர் விவேக் பிரசன்னா வழக்கறிஞர், அதற்கு அடுத்த சகோதரர் பார்த்திபன் குமார் ஐடி ஊழியர்…

Read More

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

by by Dec 5, 2024 0

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது. 

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று தெரிந்திருக்கும். எனவே, அதனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் ரசிக்கும்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வியே தவிர கதை – கத்திரிக்காய், லாஜிக் – விஷயங்கள்…

Read More

மாயன் திரைப்பட விமர்சனம்

by by Nov 29, 2024 0

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா.

‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.

அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு மெயில் வருகிறது. ‘வீடு கட்ட லோன் வேண்டுமா…

Read More

சொர்க்கவாசல் திரைப்பட விமர்சனம்

by by Nov 29, 2024 0

சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்…’ என்று ஒரு புரியாத தத்துவத்தையும் உள்ளே வைத்துக் கதை சொல்கிறார் இயக்குனர் சித்தார்த் விஷ்வநாத்.

அவர் அதற்கு எடுத்துக் கொண்டிருக்கிற களம் சிறை. அதிலும் 1999இல் நடந்த…

Read More

எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Nov 25, 2024 0

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ மன்மத லீலை போன்ற காதல் மன்னன் ஒருவரின் கதையை சொல்லப் போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

ஆனால் பாவம் அப்பாவியான அசோக் செல்வன் அவந்திகா மிஸ்ராவைக் காதலித்து எப்படி அவதி மிஸ்ராவாக ஆகிறார் என்பதுதான் லைன். 

அதற்கு முன் அங்கங்கே பருவ வயதில் அவர் செய்த சின்னக் காதலை போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

காதலிக்கும் அசோக் செல்வனை அவந்திகா மிஸ்ரா ஒரு தவறான புரிதல் மூலம் பிரிந்து விடுகிறார். காதலியுடன் மீண்டும் ஒன்று சேர அசோக்…

Read More

ஜீப்ரா திரைப்பட விமர்சனம்

by by Nov 24, 2024 0

வங்கிப் பணியாளர்கள் மக்களுடைய பணத்தை எப்படி எல்லாம் கையாடலாம் என்று சொல்லும் தெகிடி என்றொரு படம் வந்தது. அதில் விட்ட விஷயங்களை எல்லாம் இரு வாரங்களுக்கு முன்பு வந்த லக்கி பாஸ்கர் சொன்னது. 

அதில் எல்லாம் சொன்னதைக் காட்டிலும் கூட வங்கி பணத்தைக் கையாடல் செய்ய முடியும் என்று சொல்லி இந்தப் படம் வந்திருக்கிறது.

‘மைண்ட் கேம்’ என்று சொல்லக்கூடிய மூளைக்கான வேலைதான் படத்தின் அடிநாதம்.

வங்கி ஒன்றில் பணியாற்றும் நாயகன் சத்ய தேவ், பணத்தைக் கையாளுவதில் அல்லது கையாடல்…

Read More

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை.

சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார்.

ஒரு ஸ்கூல் வாத்தியாரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். (சரத்குமாரின் தேடல் வேறு)

இச்சூழலில் அம்மு அபிராமியை…

Read More

லைன்மேன் திரைப்பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது. 

ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான்.

தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் சார்லி. ஆனால் இவர் படத்தின் கதா நாயகனல்ல.

பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜிதான் படத்தின் ஹீரோ. அவர்…

Read More

பராரி திரைப்பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

சாதிய வன்கொடுமைகளைச் சொல்லிப் பல படங்கள் வந்திருந்தாலும், இன, மொழி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு நிலைகள் சொந்த மாநிலத்தில் எப்படி உள்ளது, அதே பிரச்சினைகளை வெளி மாநிலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதையும் தாண்டி இந்திய அளவில் அதன் நிலை என்ன என்பதை அலசி வெளிவந்திருக்கும் முதல் படம் இது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். சாதிதான் வேறே தவிர இருவருக்கும் மூலத்தொழில், கூலித் தொழில்தான்.

உள்ளூரில்…

Read More