“அவெஞ்சர்ஸ் இல்லாத நிலையில் இந்த உலகை யார் காப்பாற்றுவது..?” என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்க, அங்கங்கே சூப்பர் பவருடன் இருப்பவர்கள் வெறுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் (பாத்திரப் பெயர் – வாலண்டினா அலெக்ரா டி ஃபோன்டைன்) இட்ட கட்டளைகளை ஏன், எதற்கு என்று கேட்காமல் நிறைவேற்றும் ஃப்ளோரன்ஸ் பக் (யெலினா பெலோவா), செபாஸ்டியன் ஸ்டான், (பக்கி பார்ன்ஸ்), டேவிட் ஹார்பர் (ரெட் கார்டியன்), ஓல்கா குர்லென்கோ உள்ளிட்டோர் ஒரு வித இறுக்கமான சூழலுக்குத் தள்ளப்படுகிரார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கான அசைன்மென்ட் ஒன்று வேலன்டினாவிடமிருந்து வருகிறது. அங்கே சென்றபோதுதான் தெரிகிறது தங்களையே ஒருவரை ஒருவர் கொல்லும் வேலைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறோம் என்று. ஆக மூவருமே கொல்லப்படும் சூழலில் அவர்கள் ஒன்றிணைகிறார்கள்.
அவர்களுடன் இன்னொரு சூப்பர் பவர் ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லூயிஸ் புல்மனுடன் (பாப்) இணைந்து கொள்ள அங்கிருந்து எப்படித் தப்பினார்கள், அது தெரிந்த வாலண்டினா அவர்களைக் கொல்லாமல் விட்டாரா… இறுதி முடிவு என்ன என்கிற கதைதான் இந்த தண்டர்போல்ட்ஸ்.
ஃப்ளோரன்ஸ் பக் கின் இளமை, அழகு, சண்டையிடும் வேகம் இவை அதிகமாக நம்மைக் கவர்கின்றன.
காமெடி இல்லாத குறைக்கு டேவிட் ஹார்பர் பொறுப்பேற்றுக்கொண்டு அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு படத்தின் இறுதியில் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது.
மார்வெல் ஸ்டுடியோஸ்காக ஜேக் ஷ்ரேயர் இயக்கிய தண்டர்போல்ட்ஸ் படத்தை கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, பிரைன் சாபெக் மற்றும் ஜேசன் டேமஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக இருந்து உருவாக்கி இருக்கும் இந்த படம் மே 1, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழில் பார்த்தாலும் குறைவில்லாத சுவாரசியத்துடன் இருக்கிறது டப்பிங் வேலைகள்.
“நீ என்ன ஆன்லைன் டாக்டர் மாதிரி பேசுற..?”, “ஊபர் புக் பண்ணலாமா..?” போன்ற சமயோசிதமான தமிழ் வசனங்களை எழுதி நம்மை ரசித்துச் சிரிக்க செய்யும் டப்பிங் டீமுக்குப் பாராட்டுகள்..!
– வேணுஜி