January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அவசர சிகிச்சைப் பிரிவில் எஸ்பிபி – வைரல் ஆகும் புகைப்படம்
August 14, 2020

அவசர சிகிச்சைப் பிரிவில் எஸ்பிபி – வைரல் ஆகும் புகைப்படம்

By 0 614 Views

இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக எஸ்.பி.பி கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனை படுக்கையில் இருந்து தம்ஸ் அப் காட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப்படம் கீழே…

SPB in ICU

SPB in ICU