March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி
May 19, 2020

42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி

By 0 610 Views

அஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி.

‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார்.

இந்த தலைமுறை நடிகரான சமுத்திரக்கனி ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான ‘கொளஞ்சி’ படத்தில் நடித்திருந்தார்.

 இந்நிலையில் கடந்த 2016-ல் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரது வயது 38.

தற்போது 42 வயதாகும் நிலையில் சங்கவி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத் திருக்கிறார்.

இந்த விஷயத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில் வெளியிட்டுள்ள படத்தில் அவருடன் அவரது ‘கொழு கொழு’ குழந்தையும் இடம்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை இயல்பாக வாழும் எல்லோருமே எல்லா வயதிலும் அழகானவர்கள் தான்.