December 8, 2019
  • December 8, 2019
Breaking News

Tag Archives

இந்திய டிரெண்டிங்கில் அஜித் குழந்தைகள் ஆத்விக் அனோஷ்கா

by on November 6, 2019 0

‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், […]

Read More

பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ

by on October 28, 2019 0

பிகில் படத்திற்கு சென்று தளபதி விஜய் பற்றி அவதூறாக பேசிய அஜீத் ரசிகர்களை அடித்து வெளுக்கும் தளபதி ரசிகர்களின் ஆவேச காட்சி.. வாயி வாய விடு வாயில குடு #கர்மவினை #Bigil pic.twitter.com/HeU3SFSyID — The Commander (@vpravindhra) October 28, 2019   மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், பிகில் ஓடும் தியேட்டரில் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார் ஒரு விஜய் ரசிகர். அஜித்தின் […]

Read More

அஜித் 60 படத்தலைப்பு கசிந்தது உண்மை என்ன

by on October 16, 2019 0

கோலிவுட்டின் எதிரிகள் யார் என்றால் கோலிவுட் காரர்கள்தான். யாரை நம்பி ஒரு ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்டுகிறதோ, அதை இன்னொருவரிடம் சொல்லாமல் அவர் தூங்கப் போகவே மாட்டார்.  படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் எல்லாமே இந்த வகையில்தான் அறிவிக்கபடுவதற்கு முன்பே வெளிப்படுகின்றன. படத்தைப் பற்றி காஸிப்புகள் எனப்படும் கிசுகிசுக்களை மீடியாக்களிடம் பரப்பி விடுவதும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட மேனேஜர், உதவி இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். ஆனால், அதை வெளியிடும் மீடியாக்கள் மேல் ஒட்டுமொத்த கோலிவுட்காரர்களும் பாய்வார்கள்.  […]

Read More

விவேகம் படத்தால் தயாரிப்பாளருக்கு தொடரும் தலைவலி

by on September 22, 2019 0

தமிழ்ப்படத் துறையில் நல்ல தயாரிப்பாளர்களில் ஒருவர் என்றால் அது சத்யஜோதி தியாகராஜன்தான். பாரம்பரிய சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அடுத்த தலைமுறையும் சினிமாவுக்குள்ளேயேதான் இருந்து வருகிறது. அதேபோல் ஹீரோக்களில் நற்பண்புகள் நிரம்பியவர் என்று பெயர் எடுத்தவர் அஜித். தயாரிப்பாளரோ, இயக்குநரோ அவருக்குப் பிடித்த வகையில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு தன்னால் லாபம் வராமல் ஓய மாட்டார். தியாகராஜன் தயாரிப்பில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதே கூட்டணியில் அடுத்து ‘விஸ்வாசம்’ படம் நடித்துக் கொடுத்து […]

Read More

அஜித் மகளின் அதிரடியான அறிவிப்பு…

by on September 10, 2019 0

‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே இயக்கவிருக்க, அதில் காவல் அதிகாரியாகவும், பாசமிகு தந்தையாகவும் அஜித் நடிக்கவிருக்கிறார். அவரது மகளாக நடிக்கவிருப்பது அனிகாவேதான். இந்த உண்மையை படக்குழுவினர் வெளியே […]

Read More

நேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து

by on August 12, 2019 0

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. அர்ஜுன் சரவணன்.   அத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும் பணியினையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இதனைப் படித்து பயன்பெறலாம். காவல்துறை நான் நண்பன் என்பதற்கான சிறப்புக் […]

Read More

நேர் கொண்ட பார்வை திரைப்பட விமர்சனம்

by on August 8, 2019 0

இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும். பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே சுற்றாமல் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அவளுக்கென்று உடற்கூறுகள் இருக்கின்றன. அதனால் […]

Read More

அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை இனிப்பான செய்தி

by on July 15, 2019 0

அஜித் இப்போது நடித்து வெளியாகவிருக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ பற்றிய முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித் ரசிகர்களை எப்படியும் அந்த செய்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். எச்.வினோத் இயக்கும் ‘நேர் கொண்ட பார்வை’ படம் இந்தி ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பதும், அதில் நடிக்க விரும்பி அஜித் நடித்திருப்பதும் யாவரும் அறிந்த செய்தியாக இருக்க, […]

Read More