April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு
May 20, 2020

இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு

By 0 464 Views

இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65.

ஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

ராஜாவின் பல்வேறு பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசையை நாம் கேட்டிருக்கிறோம். மேகம் கொட்டட்டும், சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, காதல் மகராணி எனப் பல்வேறு இனிமையான பாடல்களில் டிரம்ஸ் வாசித்து அசத்தியவர், மறைந்த புருஷோத்தமன். நினைவோ ஒரு பறவை சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் வரும், ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரொட்டோடாம் ( Rototom) என்ற புதிய வகை ட்ரம்ஸ் இசைக்கப்பட்டது.

1986ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து பழகி, வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்தானாம்..!

ஒரு தடவை துபாயில் நடந்த இசை விழா ஒன்றில், தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து பயணிப்பவர் இவர் என்று இசை அமைப்பாளர் இளையராஜாவே இவரை பாராட்டி, அறிமுகப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார் புருஷோத்தமன். இதற்காக சிகிச்சை பெற்றும் வந்தவர் நேற்று காலமானார்.