June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மகனுடன் நடிகை பிரகதி போடும் மாஸ்டர் கமிங் குத்தாட்ட வைரல் வீடியோ
April 15, 2020

மகனுடன் நடிகை பிரகதி போடும் மாஸ்டர் கமிங் குத்தாட்ட வைரல் வீடியோ

By 0 477 Views

கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பிரகதி.

கே.பாக்யராஜின் வீட்ல விசேஷங்க ‘ படத்தில  அறிமுகமானவர். இடையில் தமிழில்  நடிக்காமல் டோலிவுட் போனவர் பிறகு ஜெயம் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் சதாவிற்கு அம்மாவாக நடித்தார்.

தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சீரியலில் கலக்கி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் இந்த பிரகதி.

இந்நிலையில், கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ள நிலையில், தனது மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் வரும் மாஸ்டர் கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார் பிரகதி.

இப்போது 44 வயதுக்கும் மேலாகி விட்ட நடிகை பிரகதி தனது மகனுடன் இணைந்து வேஷ்டி கட்டிக் கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ  வைரலாகி வருகிறது.

“இந்த வயசிலும் இப்புடி ஆடுறாரே…” என வாயை பொளந்து பார்ப்போர் எண்ணிக்கை அதிகமாம். நீங்களும் வாய் பிளக்க கீழே பாருங்க…