
சியான்கள் திரைப்பட விமர்சனம்

பிஸ்கோத் திரைப்பட விமர்சனம்
எட்டு மாதங்கள் பூட்டிக் கிடந்த தியேட்டர்களை தூசி தட்டி திறக்க… தீபாவளியே வந்து விட்டது. உச்ச ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டாலே தியேட்டர்களில் தீபாவளிதான் என்றிருக்க, அப்படி இல்லாத இந்த Post Corona தீபாவளியில் ரசிகர்கள் கொண்டாட வந்திருக்கும் ஒரு படம்தான் பிஸ்கோத்.
பிஸ்கட் என்பதன் வழக்குச் சொல்தான் பிஸ்கோத். ஆங்கிலம் தமிழ் நாக்குகளில் புழக்கத்துக்கு வராத காலங்களில் பிஸ்கட் மட்டும் புழக்கத்துக்கு வந்துவிட வாயில் பிஸ்கட்டை அடைத்து மென்றுகொண்டே சொன்னார்களோ என்னவோ, அப்படி வந்ததுதான் பிஸ்கோத்….
Read More
சூரரைப் போற்று திரைப்பட விமர்சனம்
‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே’ என்பார்கள். ஆனால் கையில் இருப்பதை வைத்துக்கொண்டு தான் மட்டுமல்ல, தன்னைப்போன்ற எல்லா சாமானியர்களையும் பறக்க வைத்த ஒரு எளிய மனிதனின் சாதனைப் போராட்டம்தான் இந்தப்படம்.
ஆகாயத்தில் பறக்கும் மனித முயற்சியில் விமானக் கண்டுபிடிப்பு காலம் காலமாகக் கைக்கொள்ளப்பட்டு அத்தனை முயற்சிகளும் wrong ஆகப் போன நிலையில் அதை Right என்று ஆக்கியது ரைட் சகோதரர்களின் முயற்சி. ஆனாலும் கூட அந்த சாதனைப் பயணத்தை ஆதிக்க சக்திகள் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு…
Read More
க பெ ரணசிங்கம் படத்தின் திரைவிமர்சனம்
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ராமநாதபுரத்தில் நடக்கும் கதை. அங்கு ஊர் பிரச்சனைகளுக்காக குரலை உயர்த்துவதுடன் இளமை மிடுக்குடன் ரொமான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி.
வறட்சி பூமிக்கே உரிய ரத்தச் சூட்டுடன் அலையும் அவர், இருபது வயதில் புரட்சி பேசி அலையாதவனும் இல்லை முப்பது வயதில் குடும்பத்துக்குள் முடங்காதவனும் இல்லை என்ற பதத்துக்கு அடையாளமாக காதலித்த அசலூர் ஐஸ்வர்யா ராஜேஷைக் கல்யாணமும் செய்து கொள்கிறார்.
ஒரு குழந்தையும் பிறந்த சூழலில் பிழைப்புக்காக வெளிநாட்டு…
Read More
மம்மீ சேவ் மி திரைப்பட விமர்சனம்
ஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன்.
ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள்.
அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.
தாங்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்து வருகிறார் கணவனை இழந்த பிரியங்கா. அவரது மகள் தனிமையில்…
Read More
டேனி திரைப்பட விமர்சனம்
பல கொடூரமான டிவி சீரியல்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களுக்கு ஓடிடி தளம் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல பல கோடிகளைக் கொட்டி படமெடுத்து தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப் பிரசாதமாகவும் அதுவே அமைந்திருக்கிறது.
அப்படி ZEE 5-ல் வெளியான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
வழக்கமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு இயக்குநர்கள் நகர்ப்புறங்களையே தேர்ந்தெடுப்பதை மாற்றி இதில்…
Read More
பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

அசுரகுரு திரைப்பட விமர்சனம்
இதுவரை ஹீரோக்கள் கொள்ளைக்காரனாகிய ‘ராபின் ஹுட்’ வகைக் கதைகள் நிறைய வந்ததுண்டு. இதுவும் அப்படி ஒரு கதைதான். ஆனால், இதில் ராபின் ஹுட் போல ஹீரோ விக்ரம் பிரபு கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் கொடுப்பதில்லை. ஏன்..? அவரே அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட குடிப்பதில்லை. ஏன் என்பதுதான் இந்தப்படத்தில் இயக்குநர் ராஜ் தீப் சொல்லியிருக்கும் புதுமை.
படத்தின் ஆரம்பத்தில், ஓடும் ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு விக்ரம்பிரபு கொள்ளையடிக்கும் காட்சி, சென்னைக்கு வந்த ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட…
Read More
வால்டர் திரைப்பட விமர்சனம்
கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார்.
இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல்…
Read More
வெல்வெட் நகரம் திரைப்பட விமர்சனம்
கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.
படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட கார்ப்பரேட் கம்பெனி ஒன்று முயல, அதைக் கண்டுபிடித்துவிடும் சமூக ஆர்வலர் கஸ்தூரி, அதற்கான ஆதாரங்களை சேகரிக்கிறார். அதனாலேயே கொலையாகிறார். ஆனால், சமயோசிதமாக அதை பத்திரிகையாளர் வரலஷ்மி வசம் சொல்லிவிட்டுச்…
Read More