June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் திரைப்பட விமர்சனம்

by by Feb 27, 2026 0

சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை கையகப்படுத்தி ஒரு ரவுடிக் கும்பல் வாடகைக்கு விட்டு வருகிறது.

அங்கு நான்காவது மாடியில் மட்டும் குடியிருக்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகன் ஆரி அர்ஜுனனுக்கு அவரது காதலியிடம் இருந்து அனாமதேய அழைப்பு வர, அந்த நான்காவது.மாடியில் வந்து தங்ககுகிறார்.

அங்கிருந்து அவரை விரட்ட அந்த ரவுடிக் கும்பல் முயற்சி செய்யும்போது அங்கிருக்கும் பலரும் கொல்லப்படுகிறார்கள். ஆரியின் கண் முன்னே அத்தனை கொலைகளும் நடந்தும் அவை நடந்ததற்கான…

Read More

தடயம் Z5 ஒரிஜினல் வெப் சீரிஸ் விமர்சனம்

by by Feb 26, 2026 0

வெப் சீரிஸ்களை வழங்குவதில் Z5 எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 27 முதல் Z5 தளத்தில் வெளியாகவிருக்கிறது சமுத்திரக்கனி, ஷிவதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் ‘தடயம்’ வெப் சீரிஸ்.

மற்ற சீரிஸ்களும் இதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெரும்பாலும் மற்ற தொடர்கள் கற்பனையில் அமைந்தவையாக இருக்க, இந்த வெப் தொடர் ஆந்திர தமிழக எல்லை பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதுதான்.

90களின் இறுதி காலகட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில்…

Read More

சிவ சம்போ திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2026 0

பெண்களைப் பெற்றவர்களுக்கு பாடம் சொல்லும் படம். பெண்ணைப் பெற்றோமா கல்யாண வயது வரை வளர்த்தோமா யாருக்காவது திருமணம் முடித்துவிட்டு நம் கடமையை முடித்தோமா என்றெல்லாம் இல்லாமல் பெண் குழந்தைகளை கவனமாக வளர்த்து அவர்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள் என்று அறிவுரை சொல்கிறது படம். 

பல படங்கள் இயக்கிய அனுபவம் பெற்ற எஸ். பி.பகவதிபாலா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பட்ஜெட்டும் குறுகிப் போக, அனைவரும் புது முகங்கள் என்பதும் நெருக்கடி கொடுக்க… ஆனால்… தான் சொல்ல…

Read More

செகண்ட் கேஸ் ஆப் சீதாராம் திரைப்பட விமர்சனம்

by by Feb 22, 2026 0

தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு சீக்வல் படம் என்பது புரிந்துவிடும். ஆக இதற்கு முன் இதே வரிசையில் இரு படங்கள் வந்திருக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை அல்லது தேவைப்பட்டால் சொல்லலாம்.

ஆனால் முன்னவற்றைப் பார்க்காமல் தனியாகப் பார்த்தாலும் இது ஒரு மர்டர் மிஸ்டரி படமாக ரசிக்கும் விதமாக இதனைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி.

இன்ஸ்பெக்டர் சீதாராம் இதில் வினோதமான தொடர் கொலைகளைச் சந்திக்கிறார். சற்றே வயது முதிர்ந்தவர்கள் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டு பின் கொல்லப்படுகிறார்கள். அப்படி…

Read More

அறிவான் திரைப்பட விமர்சனம்

by by Feb 20, 2026 0

கிரைம் திரில்லர் வகைப் படங்களின் சீசன் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் படம்.

ஊர் ஊராக மாற்றலாகி கொண்டிருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி ஆனந்த் நாக்  இப்போது நெய்வேலி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கின்றார். 

வரும் வழியிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணை மீட்கிறார்.

அவர் பொறுப்பேற்ற இரண்டொரு நாட்களிலேயே ஒரு கொலை நடக்கிறது. அது விபத்தா கொலையா என்று விசாரணை நடைபெறும் போது இன்னொரு கொலை நடக்க, அது தொடர்பாக ஒரு பாலியல் தொழிலாளியை விசாரணை…

Read More

லவ் சப்ஸ்கிரைப் ஷேர் (LSS) திரைப்பட விமர்சனம்

by by Feb 19, 2026 0

புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பது இப்போதைய சினிமா இருக்கும் சூழலில் ஆக்ஸா பிளேடு மேல் நடக்கிற சமாச்சாரம்.

அப்படி புது முகங்கள் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனை நாயகன், நாயகியாக வைத்து ஒரு த்ரில்லிங்கான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலஷ்மி முருகன்.

நாயகன் ஆதவ் கிருஷ்ணா சீனியராக இருக்கும் கல்லூரியில் ஜூனியர் ஆக வந்து சேரும் சிம்ரன் ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிய நன்றிக்காக நட்புக் கொண்டு ஆதவ்வைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். 

ஆரம்பத்தில் ஒதுங்கிப் போகும் ஆதவ்…

Read More

மை டியர் டாலி திரைப்பட விமர்சனம்

by by Feb 18, 2026 0

பரிசுத்தமான காதல் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்லும் கதை.

நாயகன் விஜே பப்பு, அறிமுக நாயகி அனுபமாவை பெண் பார்க்க வருகிறார். அப்போதுதான் தெரிகிறது இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தவர்கள் என்று.

அதுவும் பாப்புவின் மேலதிகாரியாக இருந்து நிறைய அவரைத் திட்டித் தீர்த்தவர் அனுபமா என்பதும், அப்போதும் கோபப்படாமல் அவர் மீது அன்பு பாராட்டியவர் பப்பு என்பதும் தெரிகிறது.

தனக்கு திருமணமே வேண்டாம் என்ற நினைவில் இப்போது இருக்கும் அனுபமாவுக்கு பப்பு ஒரு ஆலோசனை சொல்கிறார் அதன்படி…

Read More

சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2026 0

ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். 

செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அவரை “அப்பா..!” என்று அழைப்பதற்கு பதிலாக “அம்மா..!” என்று அழைத்து வருகிறார். 

இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஒரு…

Read More

மைலாஞ்சி திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2026 0

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் கையாண்டும் இன்னும் வரும் இயக்குநர்களுக்கு அந்தக் கதையின் மேலுள்ள மோகம் தீரவில்லை.

இதுவும் வெண்ணிற இரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுதான். 

பறவைகள் ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞராக வரும் நாயகன் ஸ்ரீ ராம் கார்த்திக் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு அரிய பறவையைத் தேடி வருகிறார். 

ஆனால் “காட்சி வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்..” என்கிற கதையாக பறவையை படம்…

Read More

கப்புள் பிரண்ட்லி (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

by by Feb 15, 2026 0

நிலையற்ற வாழ்க்கைத் தன்மையை அதன் போக்கில் சொல்லிச் செல்லும் படம். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை எப்படி எல்லாம் மனிதனை அதன் போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது என்பதை அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். 

இன்டீரியர் டெக்கரேட்டராக தொழிற்கல்வி பயின்று ஆனால் அதில் நிலைபெற முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் சோபன், வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார். 

அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட அது அவர்கள் இருவரையும் காதலுக்குள்…

Read More