April 30, 2024
  • April 30, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

என் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா

by by Apr 3, 2018 0

‘படை வீரன்’ அம்ரிதாவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவரது அட்டகாச நடிப்பைப் பார்த்தவுடன் அவர் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் என்று நினைக்கத் தோன்றும்.

கேட்டால், “என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். நான் பி காம் பட்டதாரி. சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்தது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பைப் பெற்று தந்தது” என்கிறார் அம்ரிதா.

இப்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘காளி’…

Read More

புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு

by by Mar 31, 2018 0

தமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து…

Read More

பூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்

by by Mar 30, 2018 0

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம்.

இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பஒட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது.

“பூமராங்’கில் அதர்வாவின் கதாபாத்திரம்…

Read More

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

by by Mar 30, 2018 0

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா.

“இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. எனக்கு…

Read More

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

by by Mar 30, 2018 0

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம்.

“விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக…

Read More

விஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்

by by Mar 20, 2018 0

தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். 

இந்த…

Read More

தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!

by by Mar 20, 2018 0

‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின்…

Read More

அமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது

by by Mar 19, 2018 0

அவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.

இப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’,…

Read More

விட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்

by by Mar 19, 2018 0

சினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும்.  அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள்.

ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து  விடுவார்கள்.

வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதுடன்,…

Read More

இரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்

by by Mar 19, 2018 0

‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேலைநிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது.

படத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி  விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும்.

இந்த இரண்டு படங்களின் இயக்குநர்…

Read More