பைரஸி தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து…
“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களைக் கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால், அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது…
Read More
குழந்தைக் கடத்தலைத் தடுக்க வரும் குஞ்சுமோன்..!
‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம்.
இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
காற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள்.
அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன், G. தனஞ்ஜெயன் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பாக பாடல்…
சினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்
விஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.
“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.
சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு…
Read More
நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும்-அமலா பால்
வேற லெவல் ஆக்ஷனில் விஜய் ஆண்டனி..!
தீபாவளிக்கு தில்லாகக் களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, அதே தில்லுடன் முதல்முறையாகக் காக்கிச்சட்டை போட்டுக் காவல் அதிகாரியாகிறார் களமிறங்கும் ‘திமிரு புடிச்சவன்’ (டைட்டிலைக் காட்டியே டைரக்டர் சான்ஸ் வாங்கியிருப்பார் போல…) படத்தில்.
யு டியூபில் இரண்டே தினங்களில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்த இந்த டிரைலரே இரு தினங்களாக ட்ரென்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது. இதற்குக் காரனம் விஜய் ஆண்டனியின் ‘வேற லெவல்’ ஆக்ஷன்தான். இதுவரை சாதுவான பாத்திரங்களிலேயே அவரைப் பார்த்துவந்த நமக்கு இத்தனை எமோஷனலாக வசனம் பேசியும்,…
Read More
வட சென்னை, சண்டக்கோழி 2 படங்களுடன் மோத வரும் எழுமின்
வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் ‘எழுமின்’ படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள்.
அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித்,…
Read More
சிம்பு படத்துல நடிக்கிற அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை – தனுஷ்
“எப்படா வரும்..?” என்று ஆவலை ஏற்படுத்தும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’. அடுத்த வாரம் ரிலீஸ் என்கிற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது வட சென்னை டீம்.
கண்ணிலேயே பார்க்க முடியாத தனுஷ், ‘இதுக்குதான் காத்திருந்தேன்…’ என்ற அளவில் அத்தனை ஈடுபாட்டுடன் பேசினார். அவர் பேசியதிலிருந்து…
“இந்தக் கதையை பொல்லாதவன் படத்துக்குப் பிறகு நானும், வெற்றிமாறனும் பேசினோம். ஆனா, பெரிசா ஆயிரம் கேரக்டர்களோட பண்ண வேண்டிய படம். அதனால அப்புறம் பண்ணலாம்னு ‘ஆடுகளம்’ பண்ணினோம். அதுக்குப்…
Read More
விஷாலுக்கு சவால் விடும் வரலட்சுமி சரத்குமார்
தன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து…
…
தல ரசிகனின் கதையை இயக்கும் தாதா 87 இயக்குநர்
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.
“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சீனியராகவும் அம்சன் நடிக்கின்றார்.
மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக…
Read More