‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம்.
இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
Avathara Vettai
“இந்தப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்தது…” என்கிற ஸ்டார் குஞ்சுமோன் படம் பற்றி மேலும் பேசியது…
“இப்பொழுதெல்லாம் குழந்தைகளைக் கடத்துவது சாதாரண விஷயமாகிவிட்டது. தெருவிலோ, ரோட்டிலோ தனியாக இருக்கும் குழந்தைகளைக் கடத்துவதை அன்றாடம் பேப்பர்களில் படித்திருக்கிறோம்.
இந்தத் திருடர்கள் எப்படிக் குழந்தையைக் கடத்துகிறார்கள் என்றால், ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள பலநாள் நோட்டமிட்டு அந்த வீட்டில் குறியீடு வைத்து குழந்தையைத் திருடுகிறார்கள்.
இப்படித் திட்டம் போட்டு குழந்தைத் திருடர்களை எப்படி ஹீரோ கண்டுபிடிக்கிறார் என்பதை காதல், ஆக்க்ஷனுடன் த்ரில்லராகவும் ‘அவதார வேட்டை’ படத்தில் சொல்லியிருக்கிறேன்..!” என்கிறார் இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன்.
இந்தப்படத்தில் ஹீரோவாக வி.ஆர்.விநாயக் நடிக்க, நாயகியாக மீரா நாயர் நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மைக்கேல் இசையமைக்க, ஏ.காசி விஷ்வா ஒளிப்பதிவை ஏற்கிறார். வசனத்தை சரவணன் எழுத, கதை, திரைக்கதை, எழுதி தயாரித்து இயக்குகிறார் ஸ்டார் குஞ்சுமோன்.
அந்த குஞ்சுமோன் மாதிரியே பெரிய பெயர் வாங்குங்க..!