February 28, 2021
  • February 28, 2021
Breaking News

Tag Archives

கோத்தகிரி போனாலும் ராதாரவியை கொரோனா சோதனை விடவில்லை

by on May 13, 2020 0

சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார். இது குறித்து கேள்விப்பட்ட கோத்தகிரி பகுதி சுகாதரத்துறை அதிகாரிகள், ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் அவர் அனுமதி பெற்று வந்திருப்பதாகவே மேலிடத்துக்கு போன் போட்டு காண்பித்தாராம். ஆனாலும் தற்போதுள்ள ஊரடங்கு விதிமுறைகளின்படி சென்னையிலிருந்து வந்திருப்பதால் அவர் கொரோனா […]

Read More

ராதாரவிக்கு நடிக்க வாய்ப்பு தராதீர்கள் – தமிழ் இயக்கம் வேண்டுகோள்

by on September 26, 2019 0

எதையாவது பேசிவிட்டு பிரச்சினைக்குள்ளாவது நடிகர் ராதரவிக்கு ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி “இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண். எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான்..!”என்று பேசினார் இது தொடர்பாக தமிழ்த் தன்னுரிமை இயக்கம் விடுத்த வேண்டுகோளில் “தமிழ்மொழியைப் பேசுவது வீண்.. என நம் தாய்த்தமிழை இழிவாகப் […]

Read More

ராதாரவி பேச்சு சர்ச்சை – நயன்தாரா அறிக்கை

by on March 25, 2019 0

“நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.   முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. […]

Read More

திமுக தகுதி நீக்கம் செய்வதைவிட நானே விலகுகிறேன் – ராதாரவி

by on March 25, 2019 0

‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நடிகர் […]

Read More

தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்

by on October 23, 2018 0

தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர். இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று […]

Read More

குழந்தைக் கடத்தலைத் தடுக்க வரும் குஞ்சுமோன்..!

by on October 16, 2018 0

‘குஞ்சுமோன்’ என்ற பெயர் திரையுலகில் பிரபலம். பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த இவர், இப்போது படங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், விளம்பரப்படங்கள் இயக்கி வந்த ‘ஸ்டார் குஞ்சுமோன்’ என்பவர் இப்போது பெரிய திரைக்கு ‘அவதார வேட்டை’ என்ற படத்தின் மூலம் வருகிறார். இவரே படத்தைத் தயாரித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம். இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று (15-10-18) நடந்தது. ராதாரவி, சோனா, சோனியா அகர்வால், இயக்குநர் பேரரசு மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். “இந்தப்படம் உண்மைச் சம்பவங்களின் […]

Read More

சுப்பிரமணிய சுவாமிக்காக ‘பொறுக்கிஸ்’ என்று டைட்டில் வைத்தேன் – அறிமுக இயக்குநர்

by on August 6, 2018 0

இப்போது தயாரிப்பிலிருக்கும் புதிய படம் ‘பொறுக்கிஸ்’. இப்படி ஒரு தலைப்பா என்று பதறிவிடாதீர்கள். அந்த தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளதாம். ‘கேஎன்ஆர் மூவிஸ்’ சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் இது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒளிப்பதிவும் இவரே. படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடிக்க, ரவிவர்மா இசையமைத்துள்ளார். […]

Read More