April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ராதாரவிக்கு நடிக்க வாய்ப்பு தராதீர்கள் – தமிழ் இயக்கம் வேண்டுகோள்
September 26, 2019

ராதாரவிக்கு நடிக்க வாய்ப்பு தராதீர்கள் – தமிழ் இயக்கம் வேண்டுகோள்

By 0 635 Views

எதையாவது பேசிவிட்டு பிரச்சினைக்குள்ளாவது நடிகர் ராதரவிக்கு ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி “இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண். எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான்..!”என்று பேசினார்

இது தொடர்பாக தமிழ்த் தன்னுரிமை இயக்கம் விடுத்த வேண்டுகோளில் “தமிழ்மொழியைப் பேசுவது வீண்.. என நம் தாய்த்தமிழை இழிவாகப் பேசிய ராதாரவி நடித்து வெளிவரும் எந்தப் படத்தையும் தமிழகம் புறக்கணிக்க வேண்டும்…” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் சாரம் வருமாறு…

“தெலுங்கு மொழி அமைப்பினர் நடத்திய விழா ஒன்றில் பேசிய ராதாரவி, தன் தாய்மொழி தெலுங்கு என்று மொழிந்தோடு தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் இல்லாமல் போனால் தமிழரே வாழ்ந்திருக்க முடியாது, தமிழில் தெலுங்கர்கள் பேசக்கூடாது என பேசி இருக்கிறார். அது தமிழர்களிடையே மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழைப் பழித்து தமிழ்மக்களை அவமானப்படுத்தி விட்டார்.

உலக மக்கள் யாரும் தங்களின் தாய்மொழிப் பற்றினை வெளிக்காட்டிக் கொள்வதும் அதனை புகழ்ந்து பேசிக் கொள்வதும் தவறல்ல. ஆனால் நடிகர் ராதாரவியோ, தனக்கு வாழ்வு தந்த தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழ் பேசி, நடித்துக் கொண்டே தமிழை பழிப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது.

இங்கும் தமிழருள்ளே தெலுங்கரும் பிற மொழியினரும் ஒன்று கலந்து வாழ்கிறோம். தமிழ் மக்களுக்கு இருக்கும் இந்த பண்பை கூட விளங்கிக் கொள்ள முடியாதவராக ராதாரவி இருப்பது தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இது பொறுப்பற்ற ஒரு பேச்சாகும்.

இதனை அவருக்கு உணர்த்தும் வகையில் இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்க யாரும் ராதாரவிக்கு வாய்ப்பளிக்கப் கூடாது என தமிழ்த் திரைப்படத் துறையில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கோரிக்கையாக வைக்கின்றோம்.

அதையும் மீறி தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளிக்கப்படுமானால் அத்திரைப்படங்கள் ஓடும் திரைப்பட அரங்குகளில் மறியல் நடத்தப்படும் என்பதை தமிழ்மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்..!”

ராதாரவி இதற்கு பதில் சொல்வார் என்று நம்பலாம்..!

ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ கீழே…

Courtesy – nba 24×7