November 1, 2026
  • November 1, 2026
Breaking News
September 26, 2019

சூரரைப் போற்று படத்தை முடித்தார் சூர்யா

By 0 1032 Views

‘காப்பான்’ வெற்றிக்குப் பின் சூர்யா நம்பிக்கை வைத்து நடித்துக் கொண்டிருந்த படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்குகிறார்.

சூர்யாவின் 38வது படமான இதில் அவருடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் நடிக்கிறார்கள். சண்டிகரில் ஷூட்டிங் நடந்த இந்தப்ப்படத்தின் கதை கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது. 

நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவைக் கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் சூர்யா. ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபரான கிரெக் பாவெலின் சண்டைக்காட்சிகள் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று நம்பிக்கை வைக்கலாம்.

அந்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர், இயக்குநருடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது.